Asianet News TamilAsianet News Tamil

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மது விற்பனை மீதான 30 சதவீத வரி ரத்து!!

குவைத்தின் ஷேக்டமில் மது விற்பனை மீதான 30 சதவீத வரியை ஜனவரி 1, 2023 முதல் துபாய் அரசு தளர்த்திக் கொண்டுள்ளது. மதுபான உரிமங்களை இலவசமாக பெறலாம் என்றும் அறிவித்துள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்துள்ளது.

Dubai ends 30% tax on alcohol sales and free liquor licenses to boost tourism
Author
First Published Jan 2, 2023, 11:11 AM IST

இதன் மூலம், துபாய் அரச குடும்பத்தின் நீண்டகால வருவாய் ஆதாரம் தடைபடுகிறது. ஆனால், இந்த முடிவு எமிரேட்டின் சுற்றுலா மேம்பாட்டுக்கு உதவும் என்று துபாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

துபாயின் இரண்டு மதுபான விற்பனையாளர்களால் வெளியிடப்பட்ட புத்தாண்டு தின அறிவிப்பாக இது உள்ளது. மேலும், ஆட்சியில் இருக்கும் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம் குடும்பத்தின் அரசாங்கம் இதற்கான ஆணையை பிறப்பித்துள்ளது. 

இருப்பினும், ஷேக்டமில் மதுபானம் மீதான பல ஆண்டுகளாக தளர்த்தப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.  இப்போது ரமலானில் பகல் நேரங்களில் மது விற்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது, டோர் டெலிவரி செய்யப்பட்டு வந்தது. 

துபாயின் பொருளாதார உயர்வுக்கு, நிதி ஆதாரத்துக்கு மது விற்பனை கைகொடுத்து வருகிறது. வருமானத்தை பெருக்கிக் கொடுக்கிறது. சமீபத்தில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, கால்பந்து ரசிகர்கள் பலர் அருகில் இருக்கும் துபாய் பார்களுக்கு சென்று மது அருந்தினர். இது எமிரேட் நாடுகளுக்கு வருவாய் அள்ளிக் கொடுப்பதாக இருக்கிறது என்பதை துபாய் உணர்ந்துள்ளது.  

சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் உயிரிழப்பு... உடலை மீட்டு தர கோரிய அவரது குடும்பத்தார்!!

எமிரேட்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மதுபான விநியோகஸ்தரான மரிடைம் மற்றும் மெர்கன்டைல் இன்டர்நேஷனல் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''100 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் துபாயில் எங்களது வர்த்தகத்தை தொடங்கியதிலிருந்து, எமிரேட்டின் அணுகுமுறை அனைவரையும் உள்ளடக்கியதாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயைச் சேர்ந்தவர்கள் வரி இல்லாத மதுபானங்களை வாங்குவதற்காக நீண்ட காலமாக உம் அல்-குவைன் மற்றும் பிற எமிரேட் நாடுகளுக்கு சென்று வந்தனர். துபாய் சட்டத்தின்படி, முஸ்லீம் அல்லாதவர்கள் மது அருந்துவதற்கு 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். மது அருந்துபவர்கள் பீர், ஒயின் மற்றும் மதுபானங்களை வாங்கவும், கொண்டு செல்லவும் மற்றும் உட்கொள்ளவும் அனுமதிக்கும் துபாய் காவல்துறையால் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

சீனாவில் 9,000 ஐ எட்டியுள்ள ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு… பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது பிற நாடுகள்!!

இவை இல்லாத பட்சத்தில், பிடிபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம் என்று இருக்கிறது. இருந்தபோதும், ஷேக்டாமில் இருக்கும் பார்கள், இரவு நேர விடுதிகள் மற்றும் ஓய்வறைகளில் அதிகமாக கட்டுப்பாடுகள் இல்லை.  

Follow Us:
Download App:
  • android
  • ios