Asianet News TamilAsianet News Tamil

சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் உயிரிழப்பு... உடலை மீட்டு தர கோரிய அவரது குடும்பத்தார்!!

கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Indian student died whom studied medicine in China
Author
First Published Jan 1, 2023, 11:05 PM IST

கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது குடும்பம் வறுமையில் இருப்பதால், அவரது உடலை மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தை அவரது குடும்பத்தினர் அணுகியுள்ளனர். 

இதையும் படிங்க: இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!

இந்திய மாணவர் அப்துல் ஷேக் தனது மருத்துவக் கல்வியின் இறுதி ஆண்டில், சீனாவில் இன்டர்ன்ஷிப் செய்து வந்தார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த அப்துல், டிசம்பர் 11ம் தேதி மீண்டும் சீனாவுக்கு திரும்பினார். சீனாவில் எட்டு நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பின்னர், அப்துல் ஷேக் வடகிழக்கு சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

இதையும் படிங்க: பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி! நிதிஷ்குமார் போட்ட மாஸ்டர் பிளான்.. 2024 ஆட்டம் ஆரம்பம்

இந்த நிலையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவர் அப்துல் ஷேக் உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் அவரது குடும்பத்தினர் உதவி கேட்டுள்ளனர். மேலும் தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios