ஓடும் காரில் அத்துமீறிய லெஸ்பியன் ஜோடி; பாதியில் இறக்கிவிட்ட டிரைவருக்கு நடந்தது என்ன தெரியுமா?
ஓரின சேர்க்கை என்பது பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு விஷயம். ஆனால் அமெரிக்கா போன்ற நாகரீக நாடுகளில், இது சகஜமான ஒன்று. அமெரிக்காவில் எம்மா பிச்ல், அலெக்ஸ் லோவின் எனும் இரு இளம் பெண்கள், ப்ரூக்ளினில் இருந்து மின்கட்டான் எனும் பகுதிக்கு செல்வதற்காக உபர் கால் டாக்ஸியில் ஏறி இருக்கின்றனர்.
இந்த இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக லெஸ்பியனாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த இரண்டு பெண்களும் காரில் ஏறியது முதல் முத்தம் கொடுத்து கொண்டே இருந்திருக்கின்றனர். தொடர்ந்து தாங்கள் காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து, அத்துமீறி செயல்பட துவங்கி இருக்கின்றனர்.
இதனால் கடுப்பான கால் டாக்ஸி டிரைவர், அந்த இருவரையும் பாதி வழியிலேயே இறக்கி விட்டு சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள் உபர் நிறுவனத்தில் புகார் அளித்திருக்கின்றனர். அந்த நிறுவனமும் கார் டிரைவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.
என்ன தான் இருந்தாலும் காரில் பயணிகள் நடந்துகொள்வதற்கு என ஒரு பண்பு இருக்கிறது. அதை மீறிய அவர்களுக்காக டிரைவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. என அந்த டிரைவருக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.