சீனாவில் தடம் புரண்ட புல்லட் ரெயில்... ஓட்டுனர் உயிரிழப்பு...!

புல்லட் ரெயில் சனிக் கிழமை காலை 10.30 மணி அளவில் தடம் புரண்டது. இதில் ஓட்டுனர் உயிரிழந்தார். ஏழு பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

Driver Dies, Several Injured As Bullet Train Derails In China Report

சீனாவின் கங்சொவ் மாகாணத்தில் புல்லெட் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஏழு பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. 

புல்லட் ரெயில் D2809 சீனாவின் தென்மேற்கு குயாங் மாகாணத்தில் இருந்து கங்சொவ் மாகாணத்திற்கு சென்று கொண்டு இருந்தது. அப்போது புல்லட் ரெயிலின் இரண்டு கோச்கள் மண் சரிவு காரணமாக தடம் புரண்டது. இதில் ஓட்டுனர் உயிரிழந்தார்.  மேலும் ஏழு பயணிகள் படுகாயம் அடைந்தனர். 

“குயாங்கில் இருந்து கங்சொவ் பகுதிக்கு சென்று கொண்டு இருந்த D2809 புல்லட் ரெயில் மண் சரிவு காரணமாக கங்சொவ் அருகில் சனிக் கிழமை காலை 10.30 மணி அளவில் தடம் புரண்டது. இதில் ஓட்டுனர் உயிரிழந்தார். ஏழு பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது,” என சீனாவில் இயங்கி வரும் உள்ளூர் செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் தெரிவித்து இருக்கிறது. 

மற்றொரு விபத்து:

முன்னதாக சீனாவின் ஹூனான் மாகாணத்தில் மற்றொரு ரெயில் தடம் புரண்டது. அதில் ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. 123 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த ரெயில் விபத்துக்கும் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவு தான் காரணம் ஆகும். 

Driver Dies, Several Injured As Bullet Train Derails In China Report

கடந்த பீஜிங் மற்றும் கொங்சோ இடையே செல்லும் ரெயில்களின் வேகம் ஜூன் மாத வாக்கில் மணிக்கு 350 கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்படும் என சீன ரெயில்வே கடந்த மே மாதம் 13 ஆம் தேதி வாக்கில் அறிவித்து இருந்தது. குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை அடுத்து சீனாவில் இத்தகைய வேகத்தில் செல்லும் ஐந்தாவது ரெயில் என்ற பெருமையை பெறும் என்றும் தெரிவித்து இருந்தது. 

அதிவேக புல்லட் ரெயில்:

ஜூன் 20 ஆம் தேதி முதல் பீஜிங்கில் இருந்து வூகானை இணைக்கும் ரெயில்கள் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும். இதற்கான சோதனை ஓட்டம் மே 13 ஆம் தேதி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஃபக்சிங் புல்லட் ரெயில் மற்றும் அதிவேக இண்டகிரேடெட் டெஸ்டிங் வாகனம் சோதனை செய்யப்பட்டது. இதில் ரெயிலின் வேகம் 385.1 கிலோமீட்டர் வேகத்தில் சென்றது. 

இத்தனை வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் போது பீஜிங்கில் இருந்து வூகான் வரை சுமார் 1330 கிலோமீட்டர்கள் தூரத்திற்கான பயண நேரம் 3 மணி 48 நிமிடங்களாக குறைந்து விடும். தற்போது இதே வழித் தடத்தில் ரெயில்கள் அதிகபட்சமாக 310 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios