புத்தாண்டு வாழ்த்துகளை எதிரிகளுக்கும் தொிவித்துக்காெள்கிறேன் : டிரம்ப் கிண்டல்!

எதிரிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். 

கடந்த நவம்பா் 8ம் தேதி நடைபெற்ற தோ்தலில், அமெரிக்காவின் 45-வது அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். டிசம்பா் 19ம் தேதி அதிகாரப்பூர்வ அதிபரானாா் டிரம்ப். வரும் 20 ஆம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், புத்தாண்டையொட்டி டிவிட்டரில் வாழ்த்து தொிவித்துள்ளாா். 

அதில் தம்மை எதிர்த்து தோல்வியுற்ற எதிரிகள் உள்பட அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இது அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ஹிலாரி கிளிண்டனை தாக்கி பேசுவது போல் இருப்பதாக அமெரிக்கா அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு நன்றி தெரிவிக்கும் தினத்திலும், டிரம்ப் இவ்வாறு டிவிட்டரில் கூறி இருந்தார்.

Attachments area