வளர்ப்பு நாயுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை , அந்த நாய்  கடித்ததில் படுகாயமடைந்த அந்த பெண்ணுக்கு 45 தையல்கள் போடப்பட்டுள்ளது .  செல்பி மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  சில நேரங்களில் தனக்கு லைக்குகள் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாச வித்தியாசமான முறைகளில் செல்பி எடுக்க முயற்சி செய்து அது பல விபரீதங்களில் போய் முடிந்துவிடுகிறது சிலர் செல்பி மோகத்தால் உயிரைக்கூட பறிகொடுக்கும் நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.  இது போன்ற சம்பவர்களை அடிக்கடி நடந்து வருவதை அன்றாடம் செய்தித் தாள்களில் காணமுடிகிறது. 

 

இந்நிலையில் வித்தியாசமான முறையில் செல்பி எடுக்க முயற்சி செய்த  பெண்ணை தன் சொந்த நாயே  கடித்து குதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய இளம் பெண்கள் தங்களின் வளர்ப்பு பிராணிகளுடன் வித்தியாசமான முறைகளில் செல்ஃபி எடுத்து இதை  இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை பேஷனாக வைத்துள்ளனர் . அர்ஜென்டினாவை சேர்ந்த லாரா சன்சோன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழியின்  ஷெப்பர்ட் நாயுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார் .  அந்த நாயின் வாயை விரிவாக திறந்து அந்த நாயின் பற்களுக்கு இடையில்  தன் முகத்தை வைத்து செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார் .  அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் அவரது முகத்தை ஆழமாக கடித்துவிட்டது .  இதில் படுகாயம் அடைந்த அந்த பெண். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு உள்தையல் வெளி தையல் என 45 தையல்கள் போடப்பட்டுள்ளது . இதுதொடர்பாக தெரிவித்துள்ள சன்சோன் ,  எதற்காக நாய் இவ்விதம் செய்தது  என எனக்கு தெரியவில்லை ,  நான் அதன் இடுப்பை தொட்டு செல்பி எடுக்க முயன்றதால் ,  பயத்தால் இப்படி செய்ததா.?  இல்லை வயது முதிர்வு காரணமாக இப்படி நடந்து கொண்டதா என எனக்கு தெரியவில்லை .  ஆனால் தற்போது இந்த புகைப்படங்கள்  சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது என தெரிவித்துள்ளார்.  இவரைப் போன்றவர்கள் எத்தனை நாய்கடி வாங்கினாலும்தகும் என பலர் அந்தப் பெண்ணை விமர்சித்து வருகின்றனர் .