பிரதமர் மோடி தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு தாய்லாந்து பிரதமர் சிறப்பு பரிசு அளித்துள்ளார். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

PM Narendra Modi Thailand Visit: பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தாய்லாந்து பிரதமர் பெய்தோங்டார்ன் ஷின்வத்ரா அவருக்கு “The World Tipitaka: Sajjhaya Phonetic Edition” என்ற திரிபிடகத்தை பரிசாக வழங்கினார். 

மோடிக்கு தாய்லாந்து பிரதமர் வழங்கிய பரிசு

திரிபிடகா (பாலியில்) அல்லது திரிபிடகம் (சமஸ்கிருதத்தில்) என்பது புத்தரின் போதனைகளின் புகழ்பெற்ற தொகுப்பாகும். இதில் 108 தொகுதிகள் உள்ளன. இது முக்கிய பௌத்த நூலாக கருதப்படுகிறது. பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பதிப்பு பாலி மற்றும் தாய் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இது 90 லட்சத்துக்கும் அதிகமான எழுத்துகளின் சரியான உச்சரிப்பை தீர்மானிக்கிறது.

Scroll to load tweet…

திரிபிடகா சிறப்பு பதிப்பு

இந்த சிறப்பு பதிப்பு 2016 இல் தாய் அரசாங்கத்தால் உலக திரிபிடகா திட்டத்தின் ஒரு பகுதியாக மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் (ராமா IX) மற்றும் ராணி சிரிக்கிட் ஆகியோரின் 70 ஆண்டுகால ஆட்சியை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.