James Cameron Net Worth 2023 | ஜேம்ஸ் கேமரூன் சொத்து மதிப்பு எவ்வளோ தெரியுமா? மாத வருமானமே... சுமாரா 700 கோடி
ஜேம்ஸ் கேமரூன் ஒரு கனேடிய திரைப்படத் தயாரிப்பாளர். இந்த தொழில்நுட்ப தலைமுறையின் ஒரு தலைசிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களின் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
யார் இந்த ஜேம்ஸ் கேமரூன்..
ஜேம்ஸ் கேமரூன் ஒரு புகழ் பெற்ற கனேடிய திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலராக உள்ளார். அவர் ஆகஸ்ட் 16, 1954ல் கனடாவின் கபுஸ்காசிங்கில் பிறந்தார். கேமரூன், ஹாலிவுட்டின் புதிய சகாப்தத்தின் சிறந்த மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க திரைப்படத் தயாரிப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
இவர் நடித்த, இயக்கிய மற்றும் தயாரித்த அனைத்து படங்களுமே மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஹாலிவுட்டின் ஸ்டீவன் ஸிபீல்பெர்க்கிற்குப் பிறகு, எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திரைப்படத் தயாரிப்பாளர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கேமரூனின் படங்கள் உலகம் முழுவதும் $8.7 பில்லியன் வசூலித்துள்ளன. அவரது படங்கள் பெரும்பாலும் வழக்கத்தைத் தாண்டி புதுமையான மற்றும் ஆழமான விஷயங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் கேமரூனின் நிகர மதிப்பு $700 மில்லியன். இந்திய ரூபாயில் இவரது சொத்து மதிப்பு 57,421 கோடி. மாத வருமானமே சுமார் $95 மில்லியன். இந்திய மதிப்பு படி சுமார் 700 கோடி.
1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி கனடா நாட்டில் பிறந்தார் ஜேம்ஸ் கேமரூன். இவர் ஒரு கல்லூரி Drop Out Student. அவருக்கு சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆரம்பத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்த கேமரூன், தி ஒரிஜினல் ஸ்டார் வார்ஸ் படம் பார்த்த பின் தன் இலக்கை நோக்கி அடிஎடுத்து வைத்தார். நீண்ட முற்சிக்குப் பின் அவர் இயக்கிய படம் தான் தி டெர்மினேட்டர்.
இந்த தி டெர்மினேட்டர் படம், உலகம் முழுவதிலும் எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்தது. நமக்கு பிடித்த ஹால்வுட் படங்களின் வரிசையில் கண்டிப்பாக ஒரு படமாவது கேமரூன் படைப்பாக இருக்கும். ஏலியன்ஸ், Terminator 2 The Judgement Day, Titanic, Avatar என பிரம்மாண்ட படங்களை இயக்கியுள்ளார்.
ஜேம்ஸ் கேமரூன் வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள்
மாலிபு மாளிகை | $3.8 மில்லியன்
Calabasas இல் உள்ள மாளிகை | $390k
மாலிபுவில் உள்ள மாளிகை | $4.4 மில்லியன்
Pounui ஏரியில் விவசாய நிலம் | $16 மில்லியன்
ஜேம்ஸ் கேமரூனின் கார்கள்
Mercedes-Benz S-வகுப்பு | ரூ.1.84 கோடி
Mercedes-Benz EQS | ரூ.1.77 கோடி
அலுசியா 2 படகு | ரூ.161 கோடி
நீர்மூழ்கிக் கப்பல் | ரூ.24 கோடி