நினைத்தை விட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பின்றி எல்லைக்கு செல்லாதீர்.!
உக்ரைனில் போர்களுக்கு இடையே இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன் அறிவிப்பின்றி பிற நாட்டு எல்லைக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வந்தது. இந்ந்லையில், உக்ரைன் மீது தாக்குதல் நடந்த அந்நாட்டு அதிபர் புதின் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார். 3வது நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 200க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகவும், ரஷ்ய தரப்பில் 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளின் ஆதரவு ரஷ்யாவுக்கு உள்ள நிலையில், புதின் இந்த தடைகளைக் கண்டு எல்லாம் அஞ்சியதாகத் தெரியவில்லை. இந்நிலையில், உக்ரைனில் போர்களுக்கு இடையே இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இன்றி எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் ஒரு முக்கிய அறிவுறுத்தரை வெளியிட்டுள்ளது. அதில், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எந்த முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். உக்ரைன் எல்லைப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. முன்னறிவிப்பின்றி செல்வோரை எல்லை தாண்ட வைப்பது சிரமமாக உள்ளது.
உக்ரைனில் கிழக்கு பகுதியில் உள்ள இந்தியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை வெளியேற்ற உக்ரைனில் அண்டை நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தூதரக அதிகாரிகள், தூதரக அவசர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.