Asianet News TamilAsianet News Tamil

பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டு சுயதிருப்தி அடைய வேண்டாம்... நிலைமை மிக மோசம்... WHO கடும் எச்சரிக்கை!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டு சுயதிருப்தி அடைந்துகொள்ளாதீர்கள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கெப்ரியாசஸ் எச்சரித்துள்ளார்.

Do not be self-assumed to be safe ... the situation is very bad ... WHO is warning!
Author
USA, First Published Jun 9, 2020, 10:53 AM IST

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்துக் கொண்டு சுயதிருப்தி அடைந்துகொள்ளாதீர்கள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் கெப்ரியாசஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மிக மோசமாகி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறையாதபோது மக்கள் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வது நிலைமையை மேலும் விபரீதமாக்கும். இனரீதியிலான வேறுபாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அதேசமயம், சமூக விலகலுடன் போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.Do not be self-assumed to be safe ... the situation is very bad ... WHO is warning!

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணிந்து போராட்டங்களில் ஈடுபடுங்கள். உடல்நல பாதிப்பு லேசாக இருந்தாலும் போராட்டங்கள், கூட்டங்களில் பங்கேற்காமல் தனித்திருங்கள். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கொரோனாவுக்கு உலகளவில் 4 லட்சத்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளார்கள், 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அமெரிக்காவில் மட்டும் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒருலட்சத்துக்கும் மேல் உயிரிழந்துள்ளார்கள்.

கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மெல்ல விடுபட்டு வருகின்றன. கிழக்கு ஆசியா, ஐரோப்பா தான் கொரோனாவின் தாக்குதலுக்கு மோசமாக ஆளாகி இருந்தது என்ற நிலை மாறி இப்போது அமெரிக்கா வந்துவிட்டது. ஐரோப்பியாவில் சூழல் மெல்ல முன்னேறிவரும் போது, உலகளவில் மோசமாகி வருகிறது.Do not be self-assumed to be safe ... the situation is very bad ... WHO is warning!

கடந்த 10 நாட்களில் 9 நாட்களில் உலகளவில் நாள்தோறும் ஒருலட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தெற்காசியா, அமெரிக்காவில் இருந்து மட்டும் 75 சதவீதம் கொரோனா நோயாளிகள் புதிதாக உருவாகியுள்ளார்கள். கொரோனாவிலிருந்து விடுபட்டு வரும் நாடுகளுக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது சுயதிருப்தி அடைதல்தான். நாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம் என்ற சுயதிருப்தி என்பது ஆபத்தானது. உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கரோனா பாதிப்புடனே அலைகிறார்கள்.Do not be self-assumed to be safe ... the situation is very bad ... WHO is warning!

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த வைரஸைக் கவனித்து வருகிறோம். எந்த நாடும் கவனக்குறைவாக இருப்பதற்கு இது சரியான நேரம் அல்ல. ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் மட்டும்தான் ஆயிரத்துக்கும் உள்ளாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகளவில் சில நாடுகளில் கரோனாவிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்கு வருவதையும் வரவேற்கிறோம்’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios