தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, அமெரிக்காவிலும், அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா தனது அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி தீபாவாளி பண்டிகையே கொண்டாடினார்.

இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையின் பேஸ்புக் பக்கத்தில் ஒபாமா வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,

வெள்ளை மாளிகையில் முதன்முதலாக குத்துவிளக்கை ஏற்றிவைத்து தீபாவளியை கொண்டாடிய முதல் அமெரிக்க அதிபர் என்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன்.