திருமணமான 15-வது நிமிடத்தில் நடந்த விவாகரத்து...! மணமகன் சொன்ன காரணம் என்ன?

Divorce within 15 minutes of marriage
Divorce within 15 minutes of marriage


உற்றார் உறவினர்கள் மத்தியில் தடபுடலாக நடந்த திருமணம், மணமகளின் தந்தை தன்னை அவமதித்ததால், திருமணம் முடிந்த 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்துள்ள சம்பவம் துபாவில் நடந்துள்ளது.

மணமகன் ஒருவர் திருமணம் செய்து கொள்வதற்காக வெகு நாட்களாக மணமகளை வலைவீசி தெடி வந்துள்ளார். இந்த நிலையில் அவரது விருப்பத்துக்கேற்ப பெண் கிடைத்துள்ளது.

பெண்ணின் தந்தையிடம் சென்ற அந்த மணமகன், 18 லட்சம் ரபாய் தருகிறேன். உங்கள் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கை பெண்ணின் தந்தையும் ஏற்றுக் கொண்டார். மேலும் திருமணத்துக்க முன்னதாகவே பணத்தை தரும்படியும் அவர் கேட்டுள்ளார்.

பெண்ணின் தந்தையார் கூறியதற்கு, அந்த மணமகனும் சம்மதம் தெரிவித்து ரூ.9 லட்சம் கொடுத்துள்ளார். இதன் பின்னர் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என அனைவர் முன்னிலையிலும் வெகு விமரிசையாக நேற்று திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்தவுடன், மணமகன் தருவதாக சொன்ன மீதி பணத்தை பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பெண்ணின் தந்தை, மணமகனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

மாமனாரின் இந்த செயலால் மனமுடைந்த மணமகன், அனைவர் முன்னிலையிலும் என்னை உனது தந்தை அவமதித்து விட்டார். அதனால் உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி, தலாக் சொல்லி அந்த பெண்ணை விவாகரத்து செய்தார். கோலாகலமாக நடைபெற்ற திருமணம் அடுத்த 15-வது நிமிடத்திலே விவாகரத்தில் கொண்டுபோன சம்பவம் பெரும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios