Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்த கொரோனா வேரியண்ட்.. "Deltacron"எனும் புது வைரஸ் கண்டுபிடிப்பு..அச்சத்தில் உலக நாடுகள்

தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Discovery of a new virus called Deltacron
Author
Cyprus, First Published Jan 9, 2022, 7:13 PM IST

புதிய வகை வைரசுக்கு அறிவியலாளர்கள் டெல்டாக்ரான் என்று பெயர் வைத்துள்ளனர். முன்பு உருமாற்றம் அடைந்த டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களின் பண்புகளை ஒத்திருப்பதால் புதிய கெரோனா வேரியன்டிற்கு டெல்டாக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெல்டாக்ரானின் பாதிப்பு முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து உருமாறி வருவதால் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

டெல்டாக்ரான் வைரஸை உறுதி செய்துள்ள சைப்ரஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்காலிஸ், தற்போதைய சூழலில் டெல்டாக்ரான் குறித்து மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும், புதிய வைரஸ் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.கொரோனா, பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீண்டு வந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி மீண்டும் பொது முடக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதல் முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ், விறுவிறுவென வேகமாக உலக நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலின் 3வது அலை உலக நாடுகளை கடுமையாக தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு 270 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இறப்பு விகிதம் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 6,237 ஆக உலக நாடுகளில் உள்ளது. இது கடந்த அக்டோபர் 2021-க்கு பிறகு இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு தடுப்பூசி பரவலாக்கப்பட்டது முக்கிய காரணமாக உள்ளது. ஏற்கனவே 2 டோஸ்களை பெரும்பாலானோர் இந்தியாவில் செலுத்தியுள்ள நிலையில், பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளவும் மக்களில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் 3வது அலை குறைவதற்கு மார்ச் மாதம் ஆகும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், புதிதாக உருமாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் டெல்மிக்ரான் மத்திய ஆசிய நாடான சைப்ரஸ்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பிரான்ஸில் 'IHU'எனும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான்  உலக நாடுகளில் கொரொனா மூன்றாவது அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த புதிய வைரஸ் பீதியை கிளப்பியது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த புதிய கோவிட் வேரியன்ட்யை கண்டறிந்தனர்.இதற்கு தற்காலிகமாக 'IHU' என்று பெயரிட்டுள்ளனர். மேலும் B.1.640.2 என வகையில் இருந்து வந்துள்ள 'IHU'புதிய வேரியன்ட் அந்த நாட்டில் சுமார் 12 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்க நாடான கேமரூனில் இருந்து பிரான்ஸிற்கு பரவி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வைரஸ் இதுவரை மற்ற நாடுகளில் அடையாளம் காணப்படவில்லை மற்றும் உலக சுகாதார அமைப்பின் விசாரணையின் கீழ் ஒரு வேரியன்ட் என்று பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் சமீபத்தில் புதிய உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன், சாதாரண காய்ச்சலுக்கான (ப்ளூ) பாதிப்புகளும் ஏற்படுவதால், இதற்கு ஃபுளுரோனா என்று பெயரிடப்பட்டது. மத்திய இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு, இந்த புதிய ஃபுளுரோனா வகை கொரோனா கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios