பிறந்தநாள் வாழ்த்து சொன்னால் கூட தப்பாம் இந்த நாட்டில்;வெளிநாடுகளில் நிலவும் சில விநோத நம்பிக்கைகள்;
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் உணவு உடை கலாச்சாரம் பழக்கவழக்கம் என பல வேறுபாடுகளை கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டில் சரி என கருதப்படுவது, இன்னொரு நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இது மாதிரியான விஷயங்கள் கொஞ்சம் தெரிந்திருந்தால் நமக்கு உபயோகப்படும் தானே.
ஃப்ரான்ஸ்
ஃப்ரான்ஸ் நாட்டில் யாரிடமும் அவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். அது மரியாதை இல்லாத செயலாக அங்கு கருதப்படுகிறது.
உக்ரைன்
உக்ரைன் நாட்டில் உங்களுக்கு காதலி இருந்தால், அவருக்கு பூங்கொத்து கொடுக்கும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். அங்கு இரட்டை படை எண்ணிக்கையில் பூக்கள் கொடுப்பது கல்லறையில் வைப்பதற்காக. இது தெரியாமல் நீங்கள் இரட்டைப்படை எண்ணில் பூங்கொத்து கொடுத்து, கடைசியில் அது உங்களுக்கே திரும்பிவிடபோகிறது ஜாக்கிரதை.
ஜப்பான்
உழைப்பிற்கு முக்கியத்துவம் தரும் ஜப்பான் நாட்டில், உணவகங்களில் வெயிட்டருக்கு டிப்ஸ் தருவது அவரின் உழைப்பை அவமானப்படுத்துவதாக கருதப்படுகிறது எனவே ஜப்பானில் சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுக்காதீர்கள்.
அமெரிக்கா
அமெரிக்காவில் சாப்பிட்ட பிறகு டிப்ஸ் வைக்காமல் சென்றால் அது மிகப்பெரிய அவமதிப்பாக கருதப்படுகிறது. அங்கு வெயிட்டரின் உபசரிப்பிற்கு ஏற்ப டிப்ஸ் வழங்கப்படும். நீங்கள் டிப்ஸ் தரவில்லை என்றால், அந்த வெயிட்டரின் உபசரிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடும்
ஜெர்மனி
ஜெர்மனியில் யாருக்கும் பிறந்தநாள் வரும் முன்னதாக வாழ்த்துக்கள் கூறாதீர்கள். அவ்வாறு கூறுவது அபசகுணமாக கருதப்படுகிறது. ஒருவேளை அப்படி யாராவது வாழ்த்து கூறினால், பிறந்த நாள் வரும் வரை அந்த நபர் உயிருடன் இருக்க மாட்டார். என்ற மூட நம்பிக்கை அங்கு நிலவுகிறது.
இங்கிலாந்து
இங்கிலாந்தில் யாரிடமாவது போய் நம்மவர்களிடம் விசாரிப்பது போல எவ்வளவு சம்பளம்? என கேட்காதீர்கள். அப்படி விசாரித்தால் நீங்கள் கலாச்சாரமில்லாதவராக கருதப்படுவீர்கள்.
சீனா
சீனாவில் உங்களுக்கு நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு குடையோ, கடிகாரமோ பரிசளிக்காதீர்கள். அங்கு கெட்ட சகுனத்தை கொண்டுவரும் பொருட்களாக அவை கருதப்படுகின்றன.