இறந்துபோனதாக சொன்னவரா..? திடீரென தோன்றி எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்..!

கோமா நிலையில் இருப்பதாகவும், மரணித்து விட்டதாகவும் கூறப்பட்ட கிம் ஜாங் உன் திடீரென தோன்றி வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

Did he say he was dead ..? Kim Jong Un suddenly appeared and warned

கோமா நிலையில் இருப்பதாகவும், மரணித்து விட்டதாகவும் கூறப்பட்ட கிம் ஜாங் உன் திடீரென தோன்றி வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. Did he say he was dead ..? Kim Jong Un suddenly appeared and warned

வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் தீவிர மன அழுத்தம் காரணமாக தன்னுடைய பொறுப்புகள் சிலவற்றை சகோதரியிடம் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியானது.அதைத் தொடர்ந்து தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜாங்  முன்னாள் உதவியாளரான ஜாங் சாங் மின் வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன் கோமா நிலையில் இருக்கிறார்.ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து தற்போது அவர் இறந்திருக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் பொது வெளியில் கிம் ஜாங் உன் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்று செய்தி வெளியானது.Did he say he was dead ..? Kim Jong Un suddenly appeared and warned

இந்த நிலையில் ஒரு கட்சி கூட்டத்தில் திடீர் என தோன்றிய  கிம் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒரு சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு  கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவை எதிர்கொள்ளும் வட கொரியாவின் நடவடிக்கையில் குறைபாடு இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-உன் ஒப்புக்கொண்டுள்ளார்.

Did he say he was dead ..? Kim Jong Un suddenly appeared and warned

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பவி’சூறாவளி ஆகிய இரண்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கிம் ஜாங்-உன் வட கொரிய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இரு தினங்களுக்கு முன் கட்சிக்கூட்டத்தில் பேசிய கிம் ஜாங் உன், வீரியம் மிக்க வைரஸ் குறித்த நாட்டின் அணுகுமுறையில் சில குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக் கொண்டார். ஆனால் குறைபாடுகள் குறித்த எந்த விவரமும் வழங்கவில்லை என அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் கிம் ஜாங் உன் திடீரென தோன்றி எச்சரிக்கை விடுத்துள்ளது வட கொரியாவில் என்ன நடக்கிறது என்கிற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios