4 கார்கள் ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை எடுத்துச் சென்றேனா..? ஆப்கனில் தப்பிச்சென்ற அஷ்ரப் கானி கண்ணீர் பதில்.!
என் காலில் இருந்த எனது செருப்புகளுடன் சென்றேன். என் பூட்ஸை எடுத்துச் செல்லக்கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப்கானி மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்கிற உறுதியில் இருக்கிறார். தலிபான்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய்க்கும், மூத்த அதிகாரி அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அஷ்ரப் கானி ஆதரவு அளித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை கடந்த புதன்கிழமை சென்றடைந்தார் அஷ்ரப் கானி. காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு தனது முதல் செய்தியை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அதில் தான் காபூலை விட்டு நான்கு கார்கள் மற்றும் ஹெலிகாப்டரில் பணம் நிரப்பி சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. ஏனெனில் தான் இரத்தக்களரியைத் தவிர்க்கவே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது காலணிகளை மாற்றுவதற்கு கூட நேரம் இல்லை. ஜனாதிபதி மாளிகையில் தான் அணிந்திருந்த செருப்புகளுடன் காபூலை விட்டு வெளியேறினேன்.
எனது சொந்த நலனுக்காகவும் எனது உயிரைக் காப்பாற்றுவதற்காகவும் உங்கள் ஜனாதிபதி உங்களை விற்றுவிட்டு தப்பிச் சென்றார் என்று யார் சொன்னாலும் நம்பாதீர்கள். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் அவற்றை கடுமையாக நிராகரிக்கிறேன். நான் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டேன், அதனால் என் காலில் இருந்த எனது செருப்புகளுடன் சென்றேன். என் பூட்ஸை எடுத்துச் செல்லக்கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார்.
"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் ஜனாதிபதி அஷ்ரஃப் கானி மற்றும் அவரது குடும்பத்தை நாட்டிற்கு வரவேற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமைகளுக்கு இடையில், அவர் ஓமன், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அல்லது லெபனான் ஆகிய நாடுகளுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு துபாயில் தங்கும் எண்ணம் இல்லை என்றும், வீடு திரும்புவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கானி கூறினார். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டேன். நான் காபூலில் தங்கியிருந்தால், அவர் தூக்கிலிடப்பட்டிருப்பேன். நான் அங்கு தங்கியிருந்தால், ஆப்கானிஸ்தானின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, ஆப்கானியர்களின் கண்களுக்கு முன்பாக தூக்கிலிடப்பட்டிருப்பேன்’’ என அவர் கூறினார்.