இவ்வளவு அழகான நாடா இலங்கை !! ஆச்சரியத்தில் ரசித்த டென்மார்க்கின் மிகப் பெரிய பணக்காரருக்கு நேர்ந்த சோகம் !!
அழகான நாடு என இலங்கையை தனது குடும்பத்தினருடன் சுற்றிப்பார்க்க வந்த டென்மார்க் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர், தொடர் குண்டு வெடிப்பில் தனது மூன்று குழந்தைளையும் இழந்து நிற்கிறார்.
டென்மார்க் நாட்டின் மிகப் பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான ஆன்ட்ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன் . இவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உண்டு. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தார். போர்ப்ஸ் பட்டியலின்படி, டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் இவர்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் இவருக்கு உள்ளன. இவரின், சொத்து மதிப்பு ரூ.50,000 கோடி. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஆன்ட்ரஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
குழந்தைகளின் பெயர் விவரம் போன்றவை அளிக்கப்படவில்லை. குழந்தைகளைப் பலி கொடுத்த ஆன்ட்ரஸனுக்கு ஸ்காட்லாந்து நாட்டின் 1 சதவிகித நிலம் சொந்தமானது. இந்த நாட்டில் ஆன்ட்ரஸனுக்கும் இவரின் மனைவி ஆன்னே ஸ்டார்ம் பென்டசர்ஸனுக்கும் சொந்தமாக 200,000 ஏக்கர் நிலம் உள்ளது. பிரிட்டனில் அதிகளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன.
பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜோன்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்ஸனுக்குச் சொந்தமான `பெஸ்ட் செல்லர்' நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஆஸோஸ், ஸாலான்டோ நிறுவனங்களிலும் ஆன்ட்ரஸனுக்கு குறிப்பிடத்தக்க ஷேர்கள் உள்ளன.
`இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்' என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு ஆன்ட்ரஸன் சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கிறார்.