அவசியம் ஏற்பட்டால் ராணுவ தாக்குதலில் இறங்கவும்  இந்தியா தயாங்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். தென்கொரிய தலைநகரில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானிடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் பாகிஸ்தான் இந்திய ராணுவ துருப்புகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் எந்த முடிவையும் பாகிஸ்தான் எடுக்க தயங்காது என அந்நாட்டு பிரதமர் எச்சரித்து வருகிறார். இந்த நிலையில் தென்கொரிய தலைநகர் சியோலில் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் பேசிய அவர், இந்திய இறையாண்மைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுருத்தல் சூழல் ஏற்பட்டால் இந்தியா தன்னுடை இராணுவ பலத்தை காட்ட ஒருபோது தயங்காது என்றார்.  

இதுவரை தன்வரலாற்றில் தன் ராணுவபலத்தைக்கொண்டு எந்த நாட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்ததோ அல்லது ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா ஒருபோதும் ஈடபட்டது இல்லை, இனியும் அப்படி ஈடுபடாது என்றார். இந்தியாவின் மென்மையான போக்கை பயன்படுத்தி இந்தியா இராணுவ நடவடிக்கைகளில் இறங்காது என்று யாரும் தப்புக்கணக்கு  போட்டால் அது அவர்களின் முட்டால் தனம் என்றுதான் நான் சொல்லுவேன் என்றார். நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுவதை இந்தியா ஒரு நாளும்  வேடிக்கை பார்க்காது என்ற அவர், பாதுகாப்பிலும் ராஜதந்திரத்திலும் இந்தியா மற்ற நாடுகளைவிட தனிசிறப்புடன் செயல்படும் ஆற்றல் கொண்டது என கூறினர். 

இராஜதந்திரம் படைபலம் இவை இரண்டும் இந்தியா பாதுகாப்பின் இரு கண்கள் என்றார். அத்துடன் பசுபிக் பிராந்தியத்தில் கடல், வான் பகுதிகளை பொதுவானதாக பயன்படுத்துவதற்கு அனைவருக்கும் சமமான உரிமை வழங்கும் வகையில் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை  சீனா மற்றும் பாகிஸ்தான்  ஆகிய நாடுகளை கருத்தில் கொண்டே பேசப்பட்டது  என்பது கூடுதல் தகவல்.