Asianet News TamilAsianet News Tamil

ஹாலிவுட் பாடகி Debbie Reynolds காலமானார்!

debbie reynolds-death
Author
First Published Dec 29, 2016, 4:38 PM IST


ஹாலிவுட் படவுலகின் பாடகியும், நகைச்சுவை நடிகையுமான Debbie Reynolds  காலமானார். 84 வயதான Debbie Reynolds, தனது மகளும், Star Wars திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்ற நடிகையுமான Carrie Fisher மறைந்த தினத்திற்கு மறுநாளே இறந்த சம்பவம், உலக திரைப்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் படவுலகின் 1950 மற்றும் 1960-ம் காலகட்டத்தில், சிறந்த பாடகியாகவும், நகைச்சுவை நடிகையாகவும் வலம் வந்த Debbie Reynolds-க்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டதால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

"Singin' in the rain" பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற 84 வயதான Debbie Reynolds, நேற்று முன்தினம் காலமான, Star Wars திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்ற நடிகை Carrie Fisher-ன் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்மை எனும் ஒப்பிட இயலாத உன்னத உறவை ​பெற்றிருந்த Debbie Reynolds, தன் மகள் Carrie Fisher இறந்த மறுதினமே, உயிரிழந்த சம்பவம், உலக திரைப்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios