ஈரான் ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 750 பேர் காயம் அடைந்துள்ளனர்.

What caused Iran Shahid Rajaee port explosion?: ஈரானின் பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 750 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஷாஹித் ராஜீ துறைமுக வெடி விபத்து 

ஷாஹித் ராஜீ துறைமுக வளாகத்திலிருந்து அடர்த்தியான, சாம்பல் நிற புகை எழுந்தது. இந்த வெடி விபத்து, சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயனப் பொருட்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. கடும் காற்று போன்ற சவால்களை எதிர்கொண்டாலும், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். 6 பேரை இன்னும் காணவில்லை என்று ஈரானின் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமெனி கூறியுள்ளார்.

வெடி விபத்துக்கு காரணம் என்ன?

வெடி விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை. வெடி விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிறிது நேரம் ஆகும், "ஆனால் இதுவரை துறைமுகத்தின் ஒரு மூலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன்களில் ரசாயனங்கள் இருந்திருக்கலாம், அவை வெடித்திருக்கலாம்" என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி கூறினார்.

மேலும், "ஆனால் தீ அணைக்கப்படும் வரை, காரணத்தைக் கண்டறிவது கடினம்" என்றார். காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்து வருவதால், மக்களைக் காப்பாற்ற பந்தர் அப்பாஸில் அவசர நிலையை ஈரானிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு, 561 பேர் காயம்!

ஜன்னல்களை மூடி வைக்க உத்தாவு 

சுகாதார அமைச்சகம் சுகாதாரக் குழுக்களை அணிதிரட்டி, குடிமக்களின் ஆரோக்கியத்தைக் காக்க அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும், ஜன்னல்களை மூடி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக CNN அதிகாரப்பூர்வ ஈரானிய ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

பல கி.மீ சுற்றளவில் தாக்கம் 

வெடி விபத்தினால் துறைமுக வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன, மேலும் பல கிலோமீட்டர் சுற்றளவில் ஜன்னல்கள் உடைந்துள்ளன என்று அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சில அறிக்கைகளின்படி, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பந்தர் அப்பாஸ் மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. துறைமுகம் மூடப்பட்டுள்ளது, கடல்சார் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தின் ரசாயன மற்றும் கந்தகப் பகுதியில் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக அரசு ஒளிபரப்பாளரான IRIB தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி உத்தரவு 

வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஹோர்மோஸ்கன் மாகாணத்தில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன், நிலைமை மற்றும் சம்பவத்திற்கான காரணங்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தின் பரிமாணங்களை நெருக்கமாக ஆராயவும், தேவையான ஒருங்கிணைப்புகளைச் செய்யவும், காயமடைந்தவர்களின் நிலையை நிவர்த்தி செய்யவும் உள்துறை அமைச்சர் சிறப்புப் பிரதிநிதியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டார்'' என்று தெரிவித்தார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்! ஈரான் வேண்டுகோள்!