அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்... இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்!!

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. 

curfew imposed again in sri lanka

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.  இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.

curfew imposed again in sri lanka

எனினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவசரநிலை ரத்து செய்யப்பட்ட பின்பும், இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

curfew imposed again in sri lanka

இலங்கை பொருளாதாரத்தின் மிகப்பெரிய சரிவுக்கு இந்த இருவர்தான் காரணம் என்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென இலங்கை அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் போராட்டம் நடந்த போது நடந்த மோதலால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios