இன்டர்நெட் மூலம் ஊழியருக்காக ரூ. 3.30 கோடி வசூலித்துக் கொடுத்த நிறுவனம்.. ஏன்?.. எதற்காக? முழு விவரம்!

ஒரு சரியான தருணம் வரும்போது, ​​இணையவழியில் மக்கள் செய்யும் செயல்கள் என்பது நம்மை ஆச்சர்யப்படவைக்கும் விஷயமாக இருக்கும். ஓவ்வொரு நாளும் பல காரணங்களுக்காக ஆன்லைனில் ஆயிரக்கணக்கான க்ரவுட் ஃபண்ட் திட்டங்கள் எதோ ஒரு தனிநபருக்காக செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

Crowd Funding raised for man who worked in Burger King without taking leave for 27 years

அந்த வகையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கெவின் ஃபோர்டு என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக துரித உணவு நிறுவனமான பர்கர் கிங்கிற்காக பணியாற்றி வந்துள்ளார். தற்போது அவருக்காக இணைய வழியில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

கடந்த ஜூன் 2022ல் இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில், பர்கர் கிங் ஊழியரான கெவின் ஃபோர்டுக்கு சில சாக்லேட்டுகள், ஸ்டார்பக்ஸின் சிப்பர் மற்றும் திரைப்பட டிக்கெட் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூப்பன் பரிசாக வழங்கப்பட்டதை காண முடிந்தது. 

பர்கர் கிங்கில் அவரது 27வது ஆண்டு பணியை பாராட்டும் வகையில் இந்த பரிசு அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இத்தனை ஆண்டுகாலம் ஒரு நிறுவனத்திற்கு பணிபுரிந்த ஒருவருக்கு (அதுவும் விடுப்பு எடுக்காமல்) இந்த பரிசு முறையானது அல்ல என்று பலராலும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் கடின உழைப்பாளியான அந்த ஊழியருக்கு நிதி திரட்டுவதற்காக அவரது மகள் செரினா ஃபோர்டு பிரபல இணையதளமான GoFundMe-ல் ஒரு பக்கத்தை தொடங்கினார்.

அதன் மூலமாக தற்போது அந்த நபருக்கு Crowd Funding மூலம் இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொடர்ந்த அவருக்கு உதவி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த நபர் குறித்து பேசிய அவரது மகள், "27 ஆண்டுகளுக்கு முன்பு என்னையும் என் மூத்த சகோதரியையும் அவர் எடுத்து வளர்க்க துவங்கியபோது தான் இந்த வேலையில் அவர் இணைந்தார். 

BK நிறுவனமும் அவரை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள கடந்த 27 ஆண்டுகளாக விடுப்பு கூட எடுக்காமல் அவர் கடுமையாக உழைத்து வருகின்றார். இப்பொது அவருக்கு கிடைத்துள்ள பணம் அவரது நான்கு மகள்களையும் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரியில் தொடர்ந்து படிக்க உதவும் என்றார் செரினா ஃபோர்டு.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios