அமெரிக்காவை அலறவிடும் கொரோனா... 41,000 பேர் உயிரிழப்பால் நிலைகுலைந்த டிரம்ப்..!

அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  41,114 தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Coronavirus... U.S. death toll passes 41,114

அமெரிக்காவில் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் இதுவரைஉயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  41,114 தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும்2,423,428 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 16,16 , 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 54, 225 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 635,761 சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் , இந்த கொடிய கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 166,031 பேர் உயிரிழந்துள்ளனர்.

Coronavirus... U.S. death toll passes 41,114

இந்நிலையில், அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 7,70,564 பேர் கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 25 ஆயிரத்து 511 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6,52, 752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வைரஸ் பரவியவர்களில் இதுவரை 70,799 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Coronavirus... U.S. death toll passes 41,114

ஆனால், வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1, 534 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 41,114ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் பரவியவர்கள், உயிரிழப்புகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios