அடுத்து பகீர் கிளப்பும் சீன மருத்துவர்கள்... இறந்த பிறகும் உடலில் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்..!

கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்த பிறகும் அவரது உடலில் இந்த வைரஸ் உயிருடன் இருக்குமா என்பது சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்து இறந்த 29 பேரின் உடல்களை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில். அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

coronavirus issue.. Chinese Doctors new information

கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் நுரையீரலில் இந்த வைரஸ் உயிருடன் இருப்பதாக சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,287 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது.  ஆனால், மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா என உலகின் 198 நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 5,31,630 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 24,000 தாண்டியுள்ளது.

coronavirus issue.. Chinese Doctors new information

இந்நிலையில், கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்த பிறகும் அவரது உடலில் இந்த வைரஸ் உயிருடன் இருக்குமா என்பது சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்து இறந்த 29 பேரின் உடல்களை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதில். அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

coronavirus issue.. Chinese Doctors new information

இதுதொடர்பாக சீன மருத்துவர்கள் கூறுகையில்;-  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா வைரஸ் குறைக்கிறது. மேலும், நுரையீரலை கடுமையாக சேதப்படுத்துகிறது. நோயாளி இறந்த பின்னரும் அவருடைய நுரையீரலில் உயிருடன் வைரஸ் இருக்கிறது. எனவே கொரோனோ இறந்தவர்களின்  உடல்களை  நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது என சீன மருத்துவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios