வல்லரசு நாட்டுக்கே இந்த கதியா... ஒரே நாளில் 15,000 பேருக்கு கொரோனா... சீனா, இத்தாலியை முந்திய அமெரிக்கா..!
வல்லரசு நாடானா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் இத்தாலியை ஒப்பிடும் போது உயிரிழப்பு அமெரிக்காவில் குறைவாக உள்ளது. அதாவது அமெரிக்காவில் இதுவரை 1,177 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால், நேற்று அமெரிக்காவில் ஒரே நாளில் 15,461 பேருக்கும் கொரோனா தொற்றியது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 15,000 பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பிறப்பிடமான சீனாவில் இதுவரை 81, 285 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் அங்கு 3,287 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. அந்நாட்டில் மொத்தம் இதுவரை 80,600 பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 8,215 பேர் உயிரிழந்த நிலையில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது. அதேபோல், உலகளவில் உயிரிழப்புகளின் மொத்தம் 24,000 எட்டியுட்டுள்ளது.
இந்நிலையில், வல்லரசு நாடானா அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் இத்தாலியை ஒப்பிடும் போது உயிரிழப்பு அமெரிக்காவில் குறைவாக உள்ளது. அதாவது அமெரிக்காவில் இதுவரை 1,177 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், நேற்று அமெரிக்காவில் ஒரே நாளில் 15,461 பேருக்கும் கொரோனா தொற்றியது. இதனால் அங்கு மொத்தம் 83,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகிலேய கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.