சீனாவில் கைமீறிப்போன கொரோனா...!! இறுதி முயற்ச்சியாக களத்தில் இறங்கிய ராணுவம்...!!

 இதற்கிடையே தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது . நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால்,   ஹாங்காங் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் சீனாவுக்கான எல்லையை மூடி உள்ளன .  
 

corona virus very badly affected china  and finally army came to rescue operation

கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் வுகான் நகரில் மீட்பு பணியில் ராணுவம் இறங்கியுள்ளது.  நிலைமை கைமீறியுள்ள நிலையில் செய்வதறியாது திகைத்துவரும் சீனா இராணுவத்தை களத்தில் இறக்கியுள்ளது.  ராணுவ வீரர்களும் இந்த காய்ச்சலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது என்ற பீதியும் அங்கு ஏற்பட்டுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 425 எட்டிப் பிடித்துள்ளது .  

corona virus very badly affected china  and finally army came to rescue operation

நாளொன்றுக்கு குறைந்தது 40 முதல் 45 பேர் உயிரிழந்து வருகின்றனர்.  இதனால்  சீன மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர் .  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹன் நகரிலிருந்து பரவிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் தற்போது  23 க்கும் அதிகமான நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திஉள்ளது.  அமெரிக்கா ,  பிரிட்டன் ,  தாய்லாந்து ,  தைவான் ,  இந்தியா ,  ஜப்பான் உள்ளிட்ட பல  நாடுகளுக்கு குரானா வைரஸ் பரவியுள்ளது.  இதில்

 அமெரிக்கா ரஷ்யா சீனா போன்ற நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் .  இதற்கிடையே தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது . நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதால்,   ஹாங்காங் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் சீனாவுக்கான எல்லையை மூடி உள்ளன .  

corona virus very badly affected china  and finally army came to rescue operation

அதேபோல் சீனாவில் உள்ள வெளிநாட்டவர்கள் வேக வேகமாக வெளியேறி வருகின்றனர் .  இந்நிலையில் வைரஸ் தாக்கம் அங்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது.  கொரோனா வைரஸால் மூடப்பட்டு உள்ள வுகான் நகரில் மீட்பு பணியில் சீன ராணுவம் இறங்கியது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவ மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். சீன ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 பேர் வுகானில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios