நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த ஆய்வு அறிக்கை..!! மே மாதம் நாட்டில் கொடூரம் ஆரம்பிக்கும்..??
மே 22ஆம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும் என அதன் மூலம் கணிக்கப்பட்டுள்ளது. அந்த பாதிப்பை மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன, கொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்... அதை எதிர்க்க சுகாதார உட்கட்டமைப்பு எவ்வாறு செயல்படும்... போன்றவை கணிக்கப்பட்டுள்ளன
கொரோனா வைரஸ் மே மாத தொடக்கத்தில் இருந்து அம்மாத 15 தேதி வரை உச்சநிலையை எட்டக்கூடும் எனவும் , ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கடைபிடிப்பதன் மூலம் அதை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் எனவும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாக உள்ளது. நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் இந்தியாவில் அந்த வைரஸ் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது . இந்தியாவில் இதுவரை 20 ஆயிரத்து 178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 545 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . இந்நிலையில் வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், ஆய்வு நிறுவனம் ஒன்று இந்தியா சந்திக்க உள்ள ஆபத்து குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மே 3-ம் தேதியுடன் இந்தியாவில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் , ஊரடங்கு நீட்டிக்கப்படுமா படாதா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது . இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் இந்தியாவில் இனிமேல் தான் தீவிரம் காட்ட போகிறது என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிரபல டைம்ஸ் நாளிதழும் சர்வதேச ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான புரோட்டிவிட்டி என்ற நிறுவனமும் இணைந்து நடத்தியுள்ள ஆய்வில் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன . இருந்தாலும் இந்தியாவில் இந்த நோய்த்தொற்று எப்போது உச்சநிலையை அடையும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வருகிறது, இதற்கொல்லாம் பதில் அளிக்கும் வகையில் டைம்ஸ் -புரோட்டிவிட்டி ஆய்வு நடத்தியுள்ளது,
அதில் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள எட்டு மாநிலங்களை மையமாகக் கொண்டு அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதாவது மகாராஷ்டிரா , தமிழ்நாடு , உத்தரப் பிரதேசம் , கர்நாடகா , கேரளா , ராஜஸ்தான் , தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் கணக்கிடப்பட்டுள்ளன . அமெரிக்கா , இத்தாலி , சீனா , மலேசியா , தென்கொரியா போன்ற நாடுகளை ஏற்பட்ட பாதிப்பை மையமாக வைத்து கொரோனா இந்தியாவில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதன் கால அளவு என்ன என்பது கணக்கிடப்பட்டுள்ளது . மே 22ஆம் தேதி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும் என அதன் மூலம் கணிக்கப்பட்டுள்ளது. அந்த பாதிப்பை மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன, கொரோனா வைரஸ் எவ்வாறு பரவும்... அதை எதிர்க்க சுகாதார உட்கட்டமைப்பு எவ்வாறு செயல்படும்... போன்றவை கணிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மே 15ஆம் தேதி ஊரடங்கு அமல் படுத்தினால் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் கொரோனா பாதிப்பு பூஜ்ஜிய நிலையை எட்ட வாய்ப்புள்ளது எனவும் , அதே மே 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஜூன் மாத மத்தியில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜிய நிலைக்கு எட்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது . மே முதல் வாரத்தில் 38,000 பேர் பாதிக்க வாய்ப்புள்ளது என்றும் , மே எட்டாம் தேதி வாக்கில் 40,000 பேர் பாதிக்க கூடும் என்றும், மே 14 ஆம் தேதி வாக்குல் சுமார் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரம் ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் , மே 22ஆம் தேதிக்குள் பாதிப்பு 75 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளது என்றும் அந்நிறுவனத்தின் வரைபடம் கணித்துள்ளது .