கொரோனா வைரஸ் அதிக அளவில் பெண்களைவிட ஆண்களையே அதிகம் தாக்குவதாகவும் வைரசுக்கு அதிக அளவில் ஆண்களே உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இதுவரையில் நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது .  இந்நிலையில் இந்த வைரஸில் இருந்து தப்பிக்க உலக நாடுகளில் மிகவும் போராடி வருகின்றன .  இந்நிலையில் இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த வைரசை   தடுக்க இதுவரையில்  தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதன் தீவிரம் அதிகமாக உள்ளது . 

இதற்கு மருந்து கண்டுபிடிப்பதில் இரவு  பகலாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.  இந்நிலையில் இந்த வைரஸ் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ,  இந்த வைரஸ் குறிப்பாக பெண்களை தாக்குவது விட ஆண்களை எளிதில் தாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது .  இந்த வைரஸ்  அதிகம் தாக்கியுள்ள இத்தாலியில் 70 சதவீத ஆண்கள் வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் பல்லாயிரக்கணக்கான மக்களை தாக்கிய சீனாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 64% ஆகும், அதே பெண்களில் வெரும் 36 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் .  அதேபோல் தென்கொரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது 54 சதவீதம் பேர் ஆண்களே உயிரிழந்துள்ளனர் .  இத்தாலியில் 60 சதவீதம் பெண்கள்  வைரசால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்கள் 70 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல் அமெரிக்காவிலும் அதிக அளவில் ஆண்களே பாதிக்கப்பட்டுள்ளனர் ,  இது குறித்து தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்கின்றனர்.   குறிப்பாக   பெண்கள் சுவாசப்பாதை பொருத்தவரையில் நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக உள்ளனர்,  எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் .  அதேபோல் சீனாவின் அயோவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனா குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர் அதில் பெண் எலிகளை விட  ஆண் எலிகள் இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.   ஆகவே ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கும் தொடர்பு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . இத்தாலி சீனா மற்றும் கொரியாவில் உள்ள ஆண்கள்  அதிகம் புகைப்பிடிப்பதால் குடிப்பதால் நோய்த்தொற்று அவர்களை இலகுவாக  பாதிக்கிறது என்றும் அதேபோல ஆண்களின் சுவாச நோய் இதய நோய் மற்றும் போன்றவை எளிதில் கொரோனா தாக்க ஒரு காரணமாக இருக்கலாம்  என  அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது .