கொரோனாவின் கோர தாண்டவம்... குவியும் சவப்பெட்டிகளால் திணறும் இத்தாலி... எங்கு திரும்பினும் மரண ஓலம்...!
தொடர்ந்து குவியும் சவப்பெட்டிகளை புதைக்க மயனாம் இல்லாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது.
கொரோனா எனும் கொடிய அரக்கன் தனது கோர முகத்தை மெல்ல, மெல்ல உலகத்திற்கு காட்டி வருகிறது. 2019ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கொரோனா வைரஸின் தாக்கம் இவ்வளவு கொடுமையானதாக இருக்கும் என சீன அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!
2020ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடங்கத்தில் கொரோனாவின் தீவிரத்தை கண்டு கொண்ட சீன அரசு, ஊரடங்கை பிறப்பித்தது, எல்லைகளை மூடியது, மக்கள அனைவரையும் வீட்டிற்குள் இருக்க உத்தரவிட்டது. அதற்குள் உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இத்தாலியை புரட்டி போட்டுள்ளது. தங்களுக்கு நெருக்கமான உறவினர்களின் உயிர் பிரியும் கடைசி நிமிடத்தில் கூட அவர்களுடன் இருக்க முடியாத நிலைக்கு இத்தாலி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா நோயாளிகளை காக்க களம் புகுந்த ரயில்வே... மத்திய அரசுக்கு வழங்கிய அதிரடி ஆலோசனை...!
இத்தாலியின் இக்கட்டான நிலையை புரிந்து கொண்ட சீனா மற்றும் கியூபா அரசு தங்களது மருத்துவர்களை இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. எனினும் இத்தாலியில் கொரோனா உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இத்தாலியில் 7 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து குவியும் சவப்பெட்டிகளை புதைக்க மயனாம் இல்லாமல் இத்தாலி அரசு திணறி வருகிறது. இத்தாலியில் உள்ள பெர்காமோ என்ற நகரம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டதாக தெரியகிறது. அங்கு உள்ள இடுகாடுகளே திணறும் அளவிற்கு தினமும் உடல்கள் குவிகின்றன. எங்கு பார்த்தாலும் மரண ஓலம்தான். இதற்கு எப்போது முடிவு என்றே தெரியாமல் இத்தாலி முழுவதும் கண்ணீர் அலையாக இருக்கிறது.