இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 198 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 33,214 ஆக அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 7,03,876 பாதிக்கப்பட்டு அவர்களில் 1,49,219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கோரத்தை காட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 1024 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஒருவாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.