Asianet News TamilAsianet News Tamil

வல்லரசு அமெரிக்காவையே அலற விடும் கொரோனா..! விழிபிதுங்கி நிற்கும் அதிபர் ட்ரம்ப்..!

தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கருத்து அச்சமடைந்துள்ளனர்.உலகத்தின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா நோயால் நிலைகுலைந்து போயிருப்பதால் மற்ற நாடுகள் அனைத்தும் அச்சமடைந்திருக்கின்றன.

corona death toll crossed 1000 in america
Author
America City, First Published Mar 26, 2020, 11:39 AM IST

உயிர்க்கொல்லி நோயாக சீன நாட்டில் உருவாக்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா நோய்க்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருக்கின்றனர். உலகம் முழுவதும் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா என உலகின் 196 நாடுகளில் கரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

corona death toll crossed 1000 in america

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவிலும் தனது கோர முகத்தை கொரோனா காட்டத் தொடங்கியுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 247 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி நேற்று ஒரே நாளில் 13347 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரையில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா நோய் இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்னர்.

corona death toll crossed 1000 in america

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிபர் டிரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கருத்து அச்சமடைந்துள்ளனர்.உலகத்தின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா நோயால் நிலைகுலைந்து போயிருப்பதால் மற்ற நாடுகள் அனைத்தும் அச்சமடைந்திருக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios