Asianet News TamilAsianet News Tamil

சபாநாயகாரையும் தாக்கி சாய்த்து கொடூரம்.. பாகிஸ்தானை படுத்தி எடுக்கும் கொரோனா..!

பாகிஸ்தானில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அந்நாட்டை அதிர வைத்துள்ளது. 

Corona attacking the Speaker of Pakistan
Author
Pakistan, First Published May 1, 2020, 5:18 PM IST

பாகிஸ்தானில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அந்நாட்டை அதிர வைத்துள்ளது. Corona attacking the Speaker of Pakistan

இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதை பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயக அசாத் கவுசர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , “எனக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எனது இல்லத்தில் என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.Corona attacking the Speaker of Pakistan

முன்னதாக சிந்து மாகாண ஆளுநர் இம்ரான் இஸ்மாயிலுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் கரோன தொற்று காரணமாக 16,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 385 பேர் பலியாகி உள்ளனர். 4,315 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பாகிஸ்தானில் கரோனா தொற்று பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.Corona attacking the Speaker of Pakistan

ஆனாலும், இங்கு கரோனா வைரஸ் தொற்று மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றில் 75 சதவிகிதம் சமூகப் பரவலால் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios