Asianet News TamilAsianet News Tamil

ஒமிக்ரானை தொடர்ந்து.. வந்த 'டெல்டா - கிரான்'... மறுபடியும் முதல்ல இருந்தா... பீதி கிளப்பும் புது வைரஸ்

கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு வைரஸ் உருவாகி உள்ளது என்ற செய்தி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

corona and omigran increases worldwide the news that another virus is currently developing is causing panic among the population delta gran
Author
India, First Published Jan 10, 2022, 9:14 AM IST

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட  ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.உலகளவில் ஏற்கனவே தாக்கி வரும் டெல்டா வகை கொரோனா வைரசுடன், தென் ஆப்ரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரசும் தற்போது அதிவேகமாக மக்களை தாக்கி வருகிறது. 

corona and omigran increases worldwide the news that another virus is currently developing is causing panic among the population delta gran

இவை இரண்டும் கலந்த புதிதாக மேலும் பல உருமாற்ற வைரஸ்கள் உருவாகக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்த நிலையில், சில நாட்களுக்கு முன் அதேபோல் புதிய உருமாற்ற வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.அது, ‘டெல்மைக்ரான்’ என அழைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்டா - ஒமிக்ரானின் புதிய கலவையாக, சைப்ரஸ் நாட்டில் புதிய உருமாற்ற வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு, ‘டெல்டா கிரான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

corona and omigran increases worldwide the news that another virus is currently developing is causing panic among the population delta gran

இந்நாட்டில் செயல்படும் சைப்ரஸ் பல்கலைக் கழகத்தின் வைரஸ் மூலக்கூறு துறையின் பேராசிரியர் லியான்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் இதை கண்டுபிடித்துள்ளார். நேற்று வரையில் இந்த வைரசால் 25 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் வீரியம் எப்படி இருக்கும் என்பது போகப் போகத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார். இது இரண்டுமே டெல்டா - ஒமிக்ரானின் புதிய உருமாற்றங்களாக அல்லது 2ம் வெவ்வேறு வைரசா என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை. 

corona and omigran increases worldwide the news that another virus is currently developing is causing panic among the population delta gran

இந்நிலையில், இந்த புதிய உருமாற்ற வைரஸ் கண்டுபிடிப்புகளுக்கு உலக சுகாதார அமைப்பு இதுவரையில் அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு வைரஸ் என்ற செய்தி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios