Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவும் அதிகரிக்கும் உயிரிழப்புகளும் அதிகரிக்கும்... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

corona and death toll will increase...World Health Organization warns!!
Author
Geneva, First Published Jul 17, 2022, 8:32 PM IST

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதுக்குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், அடுத்தடுத்த கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். புதிய மாறுபாடுகள் அதிகம் பரவக்கூடியதாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒமைக்ரான் பிஏ.4 மற்றும் பிஏ.5 மாறுபாடுகள் தடுப்பூசி போட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வரும் காலத்தில் ஏற்படும் கொரோனா அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அடுத்து வரும் ஒவ்வொரு அலையும் வேகமாகப் பரவக் கூடிய வகையிலும், தடுப்பூசியின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும். 

இதையும் படிங்க: இந்தியாவிலும் உணவுப் பஞ்சம் வரும், வேற்று கிரகவாசிகள் வருவார்கள் என பாபா வாங்கா ஆருடம்; யார் இவர்?

வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது, மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பைப் பொறுத்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், பிஏ.4 மற்றும் பிஏ.5 வகை கொரோனா, உலகின் பல நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வகை ஒமைக்ரான் காரணமாக அதிகம் பேருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் சூழல் உருவாகிறது.

இதையும் படிங்க: ரிஷி சுனக் மட்டும் வேண்டாம்! சொந்த கட்சியினரிடம் பரப்புரை செய்யும் போரிஸ் ஜான்சன்!

இதனால் உயிரிழப்புகளும் கூட அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, நாம் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,71,51,182 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53,82,45,891 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,25,18,324 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63,86,967 பேர் உயிரிழந்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios