Bangladesh Protest End: சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டு முறை ரத்து! மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் வங்க தேசம்!
சுதந்திர போராட்ட வீரர்ரகளின் குடும்பத்தினருக்கு இருந்த இட ஒதுக்கீட்டை, வங்க சேத உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதையடுத்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தை கைவிட்டு இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசாங்க வேலைகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரித்து அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். வங்கதேச சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரித்து நடைபெற்று வந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது.
114 பேர் பலி
வங்கதேச தலைநகர் டாக்கா மற்றும் பிற நகரங்களில் நிகழ்ந்த வன்முறை வெடிப்பில் 114 பேர் உயிரிழந்தனர். சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை வங்கதேச உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. அப்போது, அரசு வேலைகளில் 93% சதவீத காலி பணியிடங்கள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வங்கதேசத்தில் வெடித்த வன்முறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
விலகிய ஜோ பைடன்.. அதிபர் தேர்தலில் களமிறங்கும் கமலா ஹாரிஸ்.. ஓங்கும் டொனால்ட் டிரம்ப் கை!
இயல்பு நிலைக்கு திரும்பிய வங்கதேசம்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, வணிக நடவடிக்கைகள் வழக்கம்போல் மீண்டும் தொடங்கியுள்ளன. பஜார் வீதிகளில் பெரும்பாலான கடைகள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது. மக்களும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைகளில் கூடி வருகின்றனர்.
20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!