மருத்துவர்கள் சாதனை... 6 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு...!
பூடானில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளை 6 மணிநேர அறுவை சிகிச்சை பிறகு பிரித்தெடுத்து ஆஸ்திரேலியா மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பூடானில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளை 6 மணிநேர அறுவை சிகிச்சை பிறகு பிரித்தெடுத்து ஆஸ்திரேலியா மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். ஆனால் அவை மாற்றான் படத்தில் சூர்யாக்கள் இருவரும் இணைந்திருப்பது போல அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு நிமா, தவா என்று பெயரிட்டது. வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஒரு தொண்டு நிறுவன உதவியுடன் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள ராயல் சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சைக்கு டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் மற்றும் செவிலியர்கள் இணைந்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர். இறுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக தனித்தனியே பிரித்தெடுத்து சாதனை படைத்துள்ளனர்.