மனித மலத்தை ரூ.41,000 க்கு வாங்கும் கம்பெனி! ஒரு வருட டீலுக்கு ரெடியா இருந்தா ரூ.1.4 கோடி!
இந்த யோசனை வினோதமாகத் தோன்றினாலும், ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கும் மலத்தைப் பயன்படுத்தி குடல் நோய்கள் மற்றும் கடுமையான மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு உதவும் என்று ஆராய்ச்சிக் குழு நம்புகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று மைக்ரோபயோம் ஆராய்ச்சிக்காக மனித மலத்தின் மாதிரியை 500 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41,000) விலை கொடுத்து வாங்க ரெடியாக இருப்பதாக அறிவித்துள்ளது.
தினமும் தங்கள் மலத்தை நன்கொடை அளிப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக 180,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 1.4 கோடி) தருவதாகவும் அந்த நிறுவனம் உறுதியளிக்கிறது. தங்கள் ஆராய்ச்சிக்கு உதவ மல தானம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறது இந்த விசித்திரமான அறிவிப்பு.
யூடியூபில் உள்ள ஒரு விளம்பர வீடியோவில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண், உடல் மற்றும் மன ஆரோக்கியம் கொண்ட இளைஞர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். தங்கள் நிறுவனத்தில் மல தானம் செய்வது ஆவது எப்படி என்ற வழிகாட்டுதல்களையும் இந்த வீடியோ வழங்குகிறது.
பூமி மாதிரி இன்னொரு கிரகம் இருக்கு! டெஸ் சாட்டிலைட் மூலம் கண்டுபிடித்த நாசா விஞ்ஞானிகள்!
மல தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் வீடியோவில் கூறப்படுகிறது. அவர்கள் ஆராய்ச்சிக்கு மலத்தை தானம் செய்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியுமாம். அதனால் தரமான மலத்தை தானம் செய்பவரை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்களாம்.
மைக்கேல் ஹாரோப் என்பவரால் 2020இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து மல நன்கொடையாளர்களை எதிர்பார்க்கிறது. இருப்பினும், உலர் பனியில் வைத்து பாதுகாப்பாக அனுப்பினால் உலகம் முழுவதிலுமர் இருந்து மல நன்கொடையை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இந்த யோசனை வினோதமாகத் தோன்றினாலும், ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கும் மலத்தைப் பயன்படுத்தி குடல் நோய்கள் மற்றும் கடுமையான மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு உதவும் என்று ஆராய்ச்சிக் குழு நம்புகிறது.
நுண்ணுயிர் மாற்று அறுவை சிகிச்சை (FMT) என்று அழைக்கப்படும் இந்த முறை, குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்தும் திறனுக்காகவும், க்ளோஸ்ட்ரிடியம் டிஃபிசில் தொற்று மற்றும் குடல் அழற்சி நோய் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் பயன்படுமாம்.
மூணு நாளில் உயிரைக் கொல்லும் ஆபத்தான வைரஸ்! சீன ஆய்வகத்தில் நடக்கும் விபரீத விளையாட்டு!