Asianet News TamilAsianet News Tamil

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல்... 7 இந்தியர்கள் உயிரிழப்பு...!

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 7 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் மோத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது.

Christchurch terror attack... 7 Indians killed
Author
New Zealand, First Published Mar 17, 2019, 6:05 PM IST

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 7 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் மோத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. 

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 இந்தியர்கள் காணவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய தூதரகம் அவர்களைக் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு நியூசிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருடனும் ஆலோசனைகள் மேற்கொண்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 Christchurch terror attack... 7 Indians killed

இந்நிலையில் இந்த தாக்குதலில் 7 இந்தியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தூதரக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மசூதிக்குச் செல்லும் முன்பு, தங்கள் குடும்பத்தினரிடம் பேசியதாகவும் பின்னர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் 31 வயதான ஃபஹராஜ் ஹசன் என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.Christchurch terror attack... 7 Indians killed

தெலுங்கானா கரீம் நகரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான் என்பவரும் உயிரிழந்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரிப் வோரா மற்றும் அவரது மகன் ரமீஸ் வேரா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹபீஸ் முசா படேல், நவஸ்ரீயைச் சேர்ந்த மற்றொரு வம்சாவளி இந்தியர் ஆகிய நான்கு பேர் உயிரிழந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். Christchurch terror attack... 7 Indians killed

இதேபோன்று கேரள மாநிலம் கொடுங்கலூர் பகுதியைச் சேர்ந்த ஆன்சி அலி வா என்ற 27 வயதான இளம் பெண்ணும் மசூதியில் தமது கணவருடன் தொழுகை நடத்தச் சென்றபோது துப்பாக்கிச்சூட்டில்  பரிதாபமாக உயிரிழந்தார். விவசாய பல்கலைக்கழகத்தில் எம்டெக் மாணவியான இவர் கடந்த ஆண்டு தான் நியூசிலாந்து சென்றார். துப்பாக்கிச்சூட்டின்போது இவரது கணவரும் பள்ளிவாசலில் இருந்தார். ஆனால், அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios