கொரோனா வைரஸ் குறித்து வெளியான பகீர் ஆய்வு... உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய விஞ்ஞானிகள்...!
கொரோனா வைரஸ் உருவான விதத்தை தெரிந்துகொள்வது வெறும் ஆர்வம் மட்டுமல்ல.
2019ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் இறைச்சி சந்தையில் இருந்து மர்மமாக பரவத் தொடங்கிய இந்த வைரஸுக்கு 3 மாதங்கள் கழித்து கோவிட் 19 என பெயர் வைக்கப்பட்டது.
இந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு ஒன்றை ஆண்டுகள் ஆன பிறகும் வல்லரசு நாடுகளை புரட்டி போடும் அளவிற்கு தொற்றை உருவாக்கி வருவதால் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த வைரஸ் இயல்பாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பது பெரும் கேள்வியாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் உருவான விதத்தை தெரிந்துகொள்வது வெறும் ஆர்வம் மட்டுமல்ல. இது மீண்டும் மீண்டும் பரவாமல் தடுப்பதற்கான தீர்வை கண்டுபிடிக்கவும் உலகெங்கும் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
அந்த வகையில் பிரிட்டன் பேராசிரியர் அங்கஸ் டக்லீஸ், நார்வே விஞ்ஞானி பிர்ஜர் சோரென்சென் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல என கூறியுள்ள விஞ்ஞானிகள், வூகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்திலிருந்து வைரஸ் வெளியானதை மறைக்க வெளவாலில் இருந்து கொரோனா வைரஸ் உருவானதாக கூறி தப்பிக்க சீனா முயற்சிப்பதாகவும் விஞ்ஞானிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.