மலேசிய வானத்தில் திடீரென தோன்றிய மிளிரும் கோடுகள்… சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்!!

ஒரு சீன ராக்கெட் மலேசியாவின் மீது வெடித்து சிதறி, இந்தியப் பெருங்கடலில் விழும் போது வானில் ஒளிர்ந்துக்கொண்டே விழுந்தது. இதுக்குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 

chinese rocket fell on Earth with lighting up night sky and video gone viral

ஒரு சீன ராக்கெட் மலேசியாவின் மீது வெடித்து சிதறி, இந்தியப் பெருங்கடலில் விழும் போது வானில் ஒளிர்ந்துக்கொண்டே விழுந்தது. இதுக்குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இரவு வானம் விண்வெளியில் இருந்து விழுந்த சீன ராக்கெட்டின் குப்பைகள் வானில் ஒளிர்ந்தன. இதனை ட்விட்டர் பயனர் ஒருவர், மலேசியாவில் உள்ள குச்சிங்கின் மீது வானத்தில் பறந்து ஒளிரும் ஒளிக் கோடுகளின் வீடியோவை வெளியிட்டார், இது ஒரு விண்கல் என்று கூறினார். தென்கிழக்கு ஆசியாவில் இரவு நேரத்தில் வானம் திடீரென ஒளிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் கொரோனா.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு !

இதனை வீடியோ எடுத்த டிவிட்டர் பயணர் ஒருவர் அதனை முதலில் விண்கல் என்ற தலைப்புடன் டிவிட்டரில் பகிர்ந்தார். தென்கிழக்கு ஆசியாவின் வானத்தை ஒளிரச் செய்த அந்த கோடுகள் உண்மையில் சீன ராக்கெட் லாங் மார்ச் 5B இன் சிதைவுகள் என்று கண்டறியப்பட்டது. இதை அடுத்து  பின்னர் அதனை லாங் மார்ச் ராக்கெட்டின் சிதைந்த பாகங்கள் என்று திருத்திக்கொண்டார். லாங் மார்ச் 5பி ராக்கெட்டின் 22.5 டன் கோர் ஸ்டேஜ், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.45 மணியளவில் இந்தியப் பெருங்கடலில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெளிவுபடுத்தியது.

மலேசியாவில் உள்ள சிபு, பிந்துலு, குச்சிங் நகரங்களைச் சேர்ந்த பயனர்களிடமிருந்து சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டதன் மூலம் சரவாக்கில் உள்ள பலரால் இந்த வியத்தகு நிகழ்வு காணப்பட்டது. லாங் மார்ச் 5பி ராக்கெட், சுற்றுப்பாதையில் கட்டப்பட்டு வரும் புதிய சீன விண்வெளி நிலையத்திற்கு ஆய்வக தொகுதியை வழங்குவதற்காக ஜூலை 24 அன்று ஏவப்பட்டது. 2020 ஆம் ஆண்டு முதல் ஏவப்பட்டதிலிருந்து சீனாவின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்டின் மூன்றாவது விமானம் இதுவாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios