கொரோனா வைரஸால் கொத்துக்கொத்தாய் மடியும் மக்கள்... பீதியில் ரகசிய இடத்தில் பதுங்கிய சீன அதிபர்..!

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது அந்நாட்டு மக்களை கடும் கோபத்தில் இருக்கிறது. 

chinese president xi jinping is reported to be hiding in secret

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது அந்நாட்டு மக்களை கடும் கோபத்தில் இருக்கிறது. 

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், 3 வாரங்களுக்கு முன்பு அவர் பீஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியபோது, “ஒவ்வொரு சீனரும் இந்த நாட்டில் வாழ்வதற்காக பெருமைபடும் வகையில் இந்த ஆண்டு முன்னேற்றம் இருக்கும். நமது நாட்டின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதை நீங்கள் ஒவ்வொருவரும் பார்க்க போகிறீர்கள்” என பெருமையாக பேசி இருந்தார்.

 chinese president xi jinping is reported to be hiding in secret

அதன் பிறகு அதிபர் ஜிஜின்பிங் பொது நிகழ்ச்சிகளில் எதுவும் கலந்து கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கருத்துக்களை வெளியிடவில்லை. அவர் என்ன ஆனார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது. இந்த நிலையில் அவர் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் அதிபர் ஜிஜின் பிங்குக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் லீ கெக் யாங் உள்ளார். அவரிடம் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் பொறுப்பை அதிபர் ஜிஜின் பிங் ஒப்படைத்துள்ளார். இதனால் புதிய வைரஸ் தொடர்பான பணிகள் அனைத்தும் லீகெக்யாங் மேற்கொண்டு வருகிறார். chinese president xi jinping is reported to be hiding in secret

சமீபத்தில் லீகெக்யாங் உகான் மாகாணத்துக்கு சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார். வைரஸ் பாதித்த சில நோயாளிகளையும் நேரில் சந்தித்து பேசினார். இது சீன மக்களிடம் சற்று ஆறுதலை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயத்தில் அதிபர் ஜிஜின்பிங் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மத்தியில் தோன்றாமல் பாதுகாப்பு இடத்துக்கு சென்று விட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜிஜின்பிங் எங்கு இருக்கிறார் என்பது தெரியாததால் அவரது கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே சீனாவில் 31 மாகாணங்களில் மக்கள் வீடுகளுக்குள் இருக்கு மாறு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிபர் ஜிஜின்பிங் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.chinese president xi jinping is reported to be hiding in secret

மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் அதிபர் ஓடி ஒளிந்து கொண்டதாக கருதுகிறார்கள். இதனால் சீனாவில் அதிபர் ஜிஜின்பிங்குக்கு புதிய நெருக்கடி உருவாகி இருக்கிறது. சீனாவில் தனக்கு எதிராக இருந்த அரசியல் எதிரிகள் அனைவரையும் ஜிஜின்பிங் மிக வெற்றிகரமாக ஓரம் கட்டி விட்டார். தற்போது அவருக்கு சவால் விடும் வகையில் சீனாவில் தலைவர்கள் யாரும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் அனைத்தையும் தனது முழு கட்டுப்பாட்டில் அவர் வைத்திருக்கிறார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios