Asianet News TamilAsianet News Tamil

"போருக்கு தயார்" - சீன அதிபர் பரபரப்பு பேச்சு!!

chinese president speech
chinese president speech
Author
First Published Jul 30, 2017, 1:26 PM IST


சீன ராணுவத்தின் 90-வது தொடக்க நாள் விழா இன்று நடந்தது. அந்நாட்டின் மிகப்பெரிய ராணுவ தளத்தில் நடந்த ராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜி ஜின்பிங் பார்வையிட்டார். 

அப்போது அவர் பேசுகையில், “படையெடுக்கும் எதிரிகளை தோற்கடிக்கும் நம்பிக்கை மற்றும் திறனை நம்முடைய ராணுவம் பெற்றுள்ளது என நான் முழுவதுமாக நம்புகிறேன்,” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர் "சீனாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை நம்முடைய ராணுவம் பாதுகாக்கும் என கூறினார்.

chinese president speech

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் எல்லையான டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. 

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால், சிக்கிம்  எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன.

இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என கூறி வரும் சீனா, இல்லாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என மிரட்டி வருகிறது. இந்நிலையில் சீன அதிபரின் இந்த பேச்சு பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios