அறுவை சிகிச்சையில் இருந்த மூதாட்டி.. இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய மருத்துவர் - பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

Doctor Punched Patient : அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தபோது, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை தாக்கியதாக ஒரு மறுத்தவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Chinese Doctor Suspended after punching a 82 year old women while performing surgery ans

ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நோயாளியை, அவருக்கு சிகிச்சை செய்துவந்த, ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் குத்தியதாகக் கூறப்படும் செய்திகள் வெளிவந்ததை அடுத்து, சீன அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. 

சமூக வலைத்தளங்களில் அந்த மூதாட்டி தாக்கப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. ஆனால் அந்த வீடியோவில் அந்த கொடூர சம்பவம் எப்போது நடந்தது என்று அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த சம்பவம் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் நடந்தது என்று இப்பொது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மோடிக்கு எதிராக கோஷங்கள்.. அமெரிக்காவில் சிதைக்கப்பட்ட ஹிந்து கோவில் - என்ன நடந்தது? முழு விவரம்!

ஏயர் சீனா என்ற மருத்துவமனையில் தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த மருத்துவர் விசாரிக்கப்பட்டு உடனே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மூதாட்டி தாக்கப்பட்ட விஷயத்தில், அந்த மருத்துவமனையின் CEO அவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இணையத்தில் வைரலாக அந்த வீடியோவில் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு கண்களில் அறுவை சிகிச்சை செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்பொழுது மூன்று முறை அந்த அறுவை சிகிச்சை மருத்துவர், சிகிச்சை பெற்று வரும் நோயாளியை தாக்குவதையும் நம்மால் காண முடிகிறது. இந்த சம்பவம் நடந்த பொழுது அருகில் இருவர் அந்த அறுவை சிகிச்சை அறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏயர் சீனா நிறுவனத்திற்கு பல கண் மருத்துவமனைகள் இருக்கின்றது, இந்நிலையில் இந்த வீடியோ கடந்த 2019 ஆம் ஆண்டு வைரலான நிலையில், தங்களது தென்மேற்கு சீனாவில் உள்ள guigang என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த பொழுது 82 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பொழுது அவருக்கு அளிக்கப்பட்ட மயக்க மருந்தின் காரணமாக அவருக்கு ஏற்பட்ட சிறு அசௌகர்யத்தால் அவர் தனது கண்களையும் தலையையும் லேசாக சில முறை நகர்த்தி உள்ளார். 

இந்த சூழ்நிலையில் அறுவை சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளியை அந்த மருத்துவர் தாக்கியது பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியது. உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி அந்த மருத்துவர் தாக்கியதில் சிகிச்சை பெற்ற 82 வயது மூதாட்டிக்கு தலையில் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த செய்தி குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்த மூதாட்டியின் மகன், தனது தாய் தாக்கப்பட்டதற்காக மன்னிப்பு கோரிய மருத்துவமனை நிர்வாகம் சுமார் 70 அமெரிக்க டாலரை இழப்பீட்டுத் தொகையாக கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அந்த தாக்குதலின் காரணமாக தனது தாய்க்கு தற்பொழுது இடது கண்ணில் பார்வை போய்விட்டது என்றும் அந்த மகன் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios