மோடிக்கு எதிராக கோஷங்கள்.. அமெரிக்காவில் சிதைக்கப்பட்ட ஹிந்து கோவில் - என்ன நடந்தது? முழு விவரம்!

Hindu Temple In US : அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இந்து கோவில் ஒன்று சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்விற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Hindu Temple Defaced in US slogans against prime modi in walls of temples ans

அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ளது தான் நெவார்க்கின் ஸ்வாமிநாராயண் மந்திர். காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் மற்றும் இந்தியாவுக்கு எதிராகவும் கோவிலின் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் கோவில் சில பகுதிகளும் சிதைக்கப்பட்டுள்ளதாக இந்து-அமெரிக்கன் அறக்கட்டளையால் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

கோவிலின் பல சுவர்களில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வாசகங்கள் மற்றும் படங்கள் காட்டப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்தவும், "வன்முறை பயத்தை" உருவாக்கவும் வெறுப்பூட்டும் செய்திகள் எழுதப்பட்டிருக்கலாம் என்று இந்து அமெரிக்கன் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 

தாறுமாறாக வாகனத்தை ஓட்டிய இந்திய ஓட்டுநர்.. லாரி மோதி மூதாட்டி பலி - 2 தண்டனைகளை அறிவித்த சிங்கப்பூர் கோர்ட்!

இது தொடர்பாக நெவார்க் காவல் துறை மற்றும் நீதித்துறை சிவில் உரிமைகள் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

"கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள SMVS ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவம் இந்திய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் நாசகாரர்கள் மீது விரைவான விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும்" என்று இந்திய தூதரகம் Xல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கலிபோர்னியாவின் நெவார்க்கில் உள்ள SMVS ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவம் இந்திய சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரிகளால் விரைவான விசாரணை மற்றும் இந்த காழ்ப்புணர்ச்சியாளர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கைக்கு நாங்கள் அழுத்தம் கொடுத்துள்ளோம் என்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் X பக்கத்தில் கூறியுள்ளது. 

நியூ ஜெர்சியில் காணாமல் போன இந்திய மாணவி.. தகவல் தருபவர்களுக்கு 10,000 டாலர் பரிசு - FBI அறிவிப்பு! ஏன்?

கடந்த காலங்களில் அமெரிக்காவிலும் அதன் அண்டை நாடான கனடாவிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதால், ஒரு இந்து கோவில் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்று கூறப்படுகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் பிரிவினைவாத உணர்வைத் தூண்ட முயற்சிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து இந்தியா முன்னதாகவே கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios