உங்க மருந்து லெட்சணம் எங்களுக்கும் தெரியும்டா டேய்.. சீன தடுப்பூசியை கண்டு தெறித்து ஓடும் பாகிஸ்தானியர்கள்
சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தானில் சீன கொரோனா தடுப்பு மருந்தை சோதனைக்குட்படுத்த தன்னார்வலர்களை பிடிப்பது பெரும் கஷ்டமாகவுள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி குறித்து அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களால், பாகிஸ்தான் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தன்னார்வலர்களை சேர்ப்பது பெரும் சவாலாக இருப்பதாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்(NIH) அதிகாரி நிக்கி ஆசியா ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
சிங்கிள் டோஸ் தடுப்பூசி கேண்டிடேட் Ad5-nCoVக்கான இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பாகிஸ்தான் செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது, தியான்ஜினை மையமாக கொண்ட சீன தடுப்பூசி நிறுவனமான கன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் சீன இராணுவ ஆதரவு ஆராய்ச்சி குழுவான இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமி ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. . இதற்கு ஈடாக சீனா பாகிஸ்தானுக்கு COVID-19 தடுப்பூசிகளை முன்னுரிமை கொடுத்து வழங்கும்.
2022 ஜனவரியில் முடிவடையும் Ad5-nCoV 3ம் கட்ட சோதனைக்கு அர்ஜென்டினா, சிலி, மெக்ஸிகோ, சவுதி அரேபியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தானில் இருந்து கிட்டத்தட்ட 40,000 தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்பின் கீழ் பொருளாதார ரீதியாக பெய்ஜிங்கிற்கு நெருக்கமான மற்றும் 50 பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களைக் கொண்ட இஸ்லாமாபாத், கராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் லாகூரில் உள்ள ஐந்து மருத்துவமனைகளை மருத்துவ பரிசோதனைக்காக தேர்வு செய்துள்ளது சீனா. இதில் 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நெருக்கடி காலக்கட்டத்தில் பாகிஸ்தானுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ உதவிகளை செய்தது சீனா.
தடுப்பு மருந்து பரிசோதனைக்கு ஆள் சேர்ப்பதில் இருக்கும் சிக்கல் பாகிஸ்தானில் மட்டும் இருப்பதல்ல என்றூ என்ஐஎச் அதிகாரி கூறினார். "உலகளவில், பலர் தடுப்பூசிகள் மீது அவநம்பிக்கை கொள்கிறார்கள் என்று அந்த அதிகாரி கூறினார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நவம்பர் 5 ஆம் தேதி வரை 47 தடுப்பூசியை சோதிக்கும் தன்னார்வலர்கள், மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டதில், அவர்களில் 11 பேர் - Ad5-nCoVன் 3ம் கட்ட சோதனைகளில் உள்ளனர்.
பாகிஸ்தானில் இந்த தடுப்பூசி தான் முதல் முறையாக 3ம் கட்ட சோதனை செய்யப்படுகிறது. தடுப்பூசி சோதனைகளின் முதற்கட்ட சோதனைகளுக்குக்கூட தன்னார்வத் தொண்டு செய்ய 220 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட பாகிஸ்தானில் தடுப்பூசி பரிசோதனைக்கு ஆள் சேர்ப்பது மருத்துவ அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்த சீன தடுப்பூசி பரிசோதனைக்கு இதுவரை கையெழுத்திட்ட தன்னார்வலர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், சோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மருத்துவமனைகளில் ஒன்றான கராச்சியில் உள்ள சிந்து மருத்துவமனை(டிஐஎச்) - அக்., 13 முதல் 500 தன்னார்வலர்கள் பரிசோதனை செய்ததாகக் கூறப்பட்டது; இருப்பினும் அதன் இலக்கு 2,000 ஆகும்.
தடுப்பூசி சோதனைகள் குறித்து மக்களுக்கு தவறான எண்ணங்கள் இருப்பதாக TIH அதிகாரி ஃபவாத் பின் ரஷீத் நிக்கி ஊடகத்திடம் கூறினார், இதுகுறித்து பேசிய அவர், "தடுப்பூசி சோதனைகளுக்கு தன்னார்வத் தொண்டு செய்யத் தயாராக இருந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது, மேலும் இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறோம். வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் பாகிஸ்தானுக்கு புதிதல்ல.
பாகிஸ்தானில், ஏற்கனவே நீண்டகாலமாக நிறுவப்பட்ட தடுப்பூசிகளை பற்றி, குறிப்பாக போலியோ தடுப்பூசியை பற்றி தவறான தகவல்களைப் பெற்றுள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட மறுக்கிறார்கள், இது விஷம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான யு.எஸ். சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று நம்புகிறார்கள்,
கொரோனா வைரஸ் பற்றிய பிரசாரங்கள் பாகிஸ்தானில் அதிகமாகவுள்ளது. பாகிஸ்தானியர்கள் இதை சதி கோட்பாடாக கருதுகின்றனர். அக்டோபரில், Gallup பாகிஸ்தான் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 55% பாகிஸ்தானியர்கள், கொரோனா வைரஸ் உண்மையானதா என்று உறுதியாக தெரியவில்லை என்றும் 46% பேர் இது சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொன்றதாக மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டிய மதகுரு கௌகாப் நூரானி ஒகார்வி வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பரவியது. மேலும், அதிகமான மக்கள் நேர்மறையை சோதித்தால் அரசாங்கத்திற்கு அதிக வெளிநாட்டு நிதி கிடைக்கிறது; பாகிஸ்தானியர்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர், இறப்புகளை ஒப்பீட்டளவில் குறைவாக வைத்திருக்கிறார்கள்; இந்த நோய் தெற்காசியர்களை விட மேற்கத்தியர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
எனினும் உலகெங்கிலும் இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்ற ஒரு தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவரும் நம்பிக்கையில், சிலர் தவறான தகவலை மீறி சோதனைக்கு உட்படுத்தி கொள்கின்றனர். TIH அதிகாரி ரஷீத், ஒரு டாக்ஸி டிரைவரின் கையெழுத்திட்ட உதாரணத்தை மேற்கோள் காட்டி, மனிதகுலத்திற்கு சேவை செய்ய இஸ்லாம் நமக்குக் கற்பிக்கிறது என்று மேற்கோள் காட்டப்பட்டது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், மருத்துவ பரிசோதனைகளின் நிறுவனங்கள் மற்றும் ஸ்பான்சர்கள் தன்னார்வலர்களைச் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் விளம்பரங்களையும் நடத்துகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மருத்துவ சோதனை பாகிஸ்தானில் விழிப்புணர்வு அந்தளவிற்கு இல்லை.
பாகிஸ்தானில், கொரோனா குறித்த வதந்திகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவும் ஊடகங்கள், செய்தித்தாள்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாகிஸ்தானில் இதுவரை 3,40,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6,932 பேர் கோரோனாவால் உயிரிழந்துள்ளனர்.