ஜாலியா ஒரு ஃபாரின் ட்ரிப் போக ரெடியா? இந்தியர்களுக்கு விசா இலவசம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட நாடு!
Visa Free for Indian Visa : சீனா மற்றும் இந்திய குடிமக்களுக்கு வருகின்ற டிசம்பர் 1ம் தேதி முதல், 30 நாட்கள் வரை தங்குவதற்கு விசா இல்லாத அனுமதியை வழங்கும் என்று அறிவித்துள்ளது ஒரு அழகிய ஆசிய நாடு. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சிங்கப்பூருக்கு அருகில் உள்ள மிக அழகிய நாடு தான் மலேஷியா, சுற்றுலாவிற்கு என்று பல சிறந்த இடங்களை கொண்ட ஒரு ஆசிய நாடாக திகழ்கின்றது மலேசியா. இந்நிலையில் அந்த நாடு தான் சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்கு டிசம்பர் 1ம் தேதி முதல் இலவச விசா கொண்ட 30 நாள் என்ட்ரியை அளிக்கின்றது. இந்த தகவலை அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
திரு. அன்வர் தனது மக்கள் நீதிக் கட்சி மாநாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பேசியபோது, தனது உரையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும் இந்த இலவச விசா விலக்கு அவ்வளவு காலத்திற்கு அமலில் இருக்கும் என்று அவர் எந்த அறிவிப்போம் வெளியிடவில்லை. சீனாவும் இந்தியாவும் முறையே மலேசியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது பெரிய மூலச் சந்தைகளாகும்.
விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் சிறுவன்: குடும்பத்தை கண்டதும் துள்ளிக் குதித்து ஓடிய நெகிழ்ச்சி!
அரசாங்கத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மலேசியா 9.16 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை பதிவு செய்துள்ளது. அதில் சீனாவிலிருந்து 4,98,540 மற்றும் இந்தியாவில் இருந்து 2,83,885 பேர் வந்துள்ளனர். இது தொற்றுநோய்க்கு முந்தைய 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் சீனாவிலிருந்து 1.5 மில்லியன் மற்றும் இந்தியாவில் இருந்து 3,54,486 வருகையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது, அண்டை நாடான தாய்லாந்தின் முக்கிய சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்கும் அதன் மந்தமான பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும் செயல்படுத்தப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறது என்றே கூறலாம். அண்மையில் தாய்லாந்து, சீன மற்றும் இந்திய நாட்டினருக்கு விசா விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.