தான் ஒரு வலிமையான பிரதமர் என்பதை காட்டுவதற்காகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை மறைப்பதற்காகவும் பிரதமர் மோடி லடாக் பயணத்தை  மேற்கொண்டதாக சீன ஊடகங்கள் விமர்சித்துள்ளன. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தது குறித்து மோடி பேசியபோது, இந்திய பிரதமர் அமைதியை விரும்புகிறார் என பாராட்டிய சீன ஊடகங்கள் தற்போது அவரை கடுமையாக  விமர்சித்துள்ளன. இந்தியா-சீனா இடையே கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. ஜூன்-15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் இச்சம்பவத்தை அடுத்து இரு நாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 

ஒருபுறம் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகள்  நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் சீனா தொடர்ந்து எல்லையில் ராணுவத்தை குவித்து வருவதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும்  போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய பிரதமர் மோடி யாரும் எதிர்பாராத வகையில் இந்திய சீன எல்லையாக கிழக்கு லடாக் பகுதியில் உள்ள லேவுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். பின்னர் அங்கு ராணுவ வீரர்களை சந்தித்த அவர், அவர்களை உற்சாகமூட்டும் வகையில் பேசியதுடன் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர் எல்லை விரிவாக்க சகாப்தம் முடிந்து விட்டது என்றும், இது வளர்ச்சிக்கான நேரம் என்றும் அவர் சீனாவை பெயர் குறிப்பிடாமல் எச்சரித்தார். இந்நிலையில் மோடியில் லடாக் பயணம் சீனாவை மிகுந்த கலக்கமடைய வைத்துள்ளது. இந்நிலையில் மோடியில் லடாக் பயணம் குறித்து சீன ஊடகங்கள் கடுமையாக தாக்கியும் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும் செய்து வெளியிட்டுள்ளன. 

குறிப்பாக சீன கம்யூனிஸ்டு கட்சியில் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை மோடியில் லடாக் பயணத்தை மிக மோசமாக விமர்சித்துள்ளது, ஆதாவது பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தான் ஒரு வலிமையானவர் என்பதை காட்டுவதற்காகவும், நாட்டின் பொருளாதார மந்த நிலையை மறைப்பதற்காகவுமே அவர் லடாக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என கூறியுள்ளது. மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில்   மோடி அரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்கவும், கொரோனா விவகாரத்தில் அவருக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்களை திசைதிருப்பவும் அவர் லேவுக்கு பயணம் மேற்கொண்டதாக அந்ந நாளேடு விமர்சித்துள்ளது. ஜூன்-15 அன்று சம்பவத்தில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மோடி அற்றிய உரையை பாராட்டிய சீன ஊடகங்கள் தற்போது மோடியில் லே பயணத்தை கடுமையாக தாக்கிவருவது குறிப்பிடதக்கது.