ஆஸ்திரேலியா எங்கள் காலில் ஒட்டியுள்ள தூசுக்கு சமானம்..!! சீனா திமிர் பேச்சு..!!
நாங்கள் ஏன் ஆஸ்திரேலியாவின் ஒயின் குடிக்க வேண்டும் , ஏன் ஆஸ்திரேலிய மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் , எங்கள் குழந்தைகள் ஏன் ஆஸ்திரேலியாவுக்கு வந்து படிக்க வேண்டும், என கேள்வி
கொரோனா வைரஸ் உருவானது குறித்து சீனாவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென ஆஸ்திரேலியா கூறிவரும் நிலையில் ஆஸ்திரேலியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் எனவும், அது எங்கள் காலில் ஒட்டியுள்ள தூசுக்கு சமம் எனவும் சீன நாட்டு அரசு ஊடகம் ஆஸ்திரேலியாவை கடுமையாக விமர்சித்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது , இந்நிலையில் அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சீனாவை மிகக் கடுமையான விமர்சித்து வருகின்றனர், அதற்கு இணையாக ஆஸ்திரேலியாவும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து சீனாவின் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் இதுபோன்று கருத்து சீனா அரசியல் வல்லுநர்களை மிகுந்த கோபமடைய வைத்துள்ளது , இது குறித்து தெரிவித்துள்ளா சீன அரசு ஊடகங்களில் ஒன்றான குளோபஸ் டைம்ஸின் செய்தி ஆசிரியர் ஹு ஜிஜின், ஆஸ்திரேலியா தொடர்ந்து சீனாவின் மீது அவதூறு கூறி வருவது இரு நாட்டு உறவுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது , ஏனெனில் ஆஸ்திரேலியா தொடர்ந்து சீனா மீது அவதூறு பரப்பி வருகிறது. இது ஒரு நாள் ஆஸ்திரேலியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார் . ஆஸ்திரேலியா தன் மொத்த வர்த்தகத்தில் 26% அளவிற்கு சீனாவையே சார்ந்துள்ளது, இது கடந்த 2018 - 2019 ஆம் ஆண்டில் சுமார் 235 பில்லியன் டாலர் மதிப்பு உடையதாகும் , நிலக்கரி , இரும்பு தாது ஒயின் மாட்டிறைச்சி போன்ற ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதிக்கு சீனா மிகப் பெரிய ஒற்றை சந்தையாக இருந்து வருகிறது. அத்துடன் சுற்றுலா மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி என ஆஸ்திரேலியாவின் வருமானத்திற்கு சீனாவே பெரும்பங்காற்றி வருகிறது.
ஆனால் ஸ்காட் மோரிசன் அரசாங்கம் வுஹான் மையப்பகுதியிலிருந்துதான் வைரஸ் பரவியது , இது உலகளவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது இதை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கூறி வருகிறது . இப்படி தொடர்ந்து பேசுவதன் மூலம் அதன் வர்த்தகம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் , கொரோனா ஒய்ந்த பிறகு ஆஸ்திரேலியா வியாபாரம் செய்யும்போது இதன் பாதிப்புகளை அது சந்திக்க வேண்டியிருக்கும் , எனவே அது விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார் . ஆஸ்திரேலியா இப்போது சீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கிறது , ஆனால் ஆஸ்திரேலியா என்பது சீனாவின் காலணிகளில் ஒட்டியிருக்கும் " சுவிங்கம் " போன்றது . சில நேரங்களில் அதை அகற்ற நாங்கள் கடினமான கல்லைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என மோசமாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு இறுதியாக ஒன்றை எச்சரிக்க விரும்புகிறேன் , சீனாவுடன் ஆஸ்திரேலியா அணுகுமுறைகள் மோசமாக மோசமாக சீன நிறுவனங்களும் ஆஸ்திரேலியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை குறைக்கும் என எச்சரித்துள்ளார் . இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுக்கான (வர்த்தக பிரிவு) சீன தூதர் ஜிங்கே செங், நாங்கள் ஏன் ஆஸ்திரேலியாவின் ஒயின் குடிக்க வேண்டும் , ஏன் ஆஸ்திரேலிய மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் , எங்கள் குழந்தைகள் ஏன் ஆஸ்திரேலியாவுக்கு வந்து படிக்க வேண்டும், என கேள்வி எழுப்பியுள்ள அவர் ஆஸ்திரேலியா பொருட்களை சீனர்கள் புறக்கணிப்பார்கள் என எச்சரித்துள்ளார் . இந்நிலையில் அதே வகையிங் சீன அரசியல் வல்லுனரும் ஊடக செய்தியாசிரியருமான ஹு ஜிஜின், ஆஸ்திரேலியாவை கடுமையாக விமர்சித்திருப்பது ஆஸ்திரேலியாவை மிகுந்த அவமானத்திற்கு உள்ளாக்கியுள்ளது .