போருக்கு தயாராகும் சீனா; தைவான் வரும் நான்சி பெலோசியை வரவேற்க சிவப்பு பட்டுக் கம்பளம் தயார்!!

Nancy Pelosi Taiwanஅமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இன்று இரவு தைவானுக்குச் செல்கிறார். இதையொட்டி சீனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

China war Joe biden Nancy Pelosi visits to Taiwan

சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே ஏற்கனவே மறைமுக போர் நடந்து கொண்டு இருக்கும்போது, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றால், அதற்கான விலையை அமெரிக்கா கொடுக்க வேண்டியது இருக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், போருக்கு சீன ராணுவம் அழைப்பு விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தனது 95 ஆண்டு விழாவை கொண்டாடி இருந்தது. இதையொட்டி போருக்கு அழைப்பு விடுத்து சீன ராணுவம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. பெரும்பாலும், போரிடுவதை வரவேற்று சீன மக்கள் பதிவிட்டு இருந்தனர். சீன ராணுவம் பதிவிட்ட 12 மணி நேரத்தில் மூன்று லட்சம் லைக்குகளை பெற்று இருந்தது. 

taiwan: pelosi:நான்சி பெலூசி தைவான் சென்றால் அதற்குரிய விலை கொடுப்பீர்கள்: அமெரி்க்காவுக்கு சீனா எச்சரிக்கை

சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியதாக பதிவிட்டு இருந்த அந்த நாட்டின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை, ''யாருக்கு போரிட திறமை இருக்கிறதோ அவர்களால்தான் போரையும் தடுக்க முடியும். யார் போருக்கு தயார் ஆகிறார்களோ, அவர்கள் போரிட வேண்டியதில்லை''  என்று குறிப்பிட்டு இருந்தது. 

சீன ராணுவத்தின் ஒரு பிரிவு பதிவிட்டு இருக்கும் செய்தியில், ''ஒரு வலுவான ராணுவத்தின் அடிப்படை பொறுப்பே போரை ஏற்றுக் கொண்டு, பயணத்தை துவக்குவதுதான்'' என்று தெரிவித்துள்ளது. 

இவ்வாறு சீன ராணுவம் பதிவிடுவதற்கு காரணமே, தைவானை சீனா தனது நாட்டின் ஒரு அங்கம் என்று கருதுவதுதான். ஆனால், தைவான் தனி நாடு என்றும், தனிப்பட்ட நிர்வாகத்தைக் கொண்டது என்றும், அதன் உள் விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது என்றும் அமெரிக்கா எச்சரித்து வருகிறது. 

இந்த நிலையில்  ஞாயிறன்று ஆசிய பயணத்தை மேற்கொண்டு இருக்கும் நான்சி பெலோசி, இன்று இரவு தைவான் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கான சிவப்பு பட்டுக் கம்பள வரவேற்பும் தயாராகி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருப்பதை குறிப்பிட்டு இருந்தார். மலேசியாவில் இருந்து தைவானுக்கு இன்று இரவு (செவ்வாய் கிழமை) செல்லும் நான்சி பெலோசி அந்த நாட்டில் இரவு தங்குகிறார்.  

இலங்கை வரும் சீன கப்பல்; தமிழ்நாட்டை வேவு பார்க்கிறதா? பதறும் இலங்கை!!

அமெரிக்காவின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவராக பெலோசி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தைவானுக்கு செல்கிறார். கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசி இருந்த ஜி ஜின்பிங் எச்சரிக்கையும் விடுத்து இருந்தார் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. அதாவது, ''யார் தீயில் விளையாடுகிறார்களோ, அவர்கள் தீயினால் அழிவார்கள்'' என்று ஜி ஜின்பிங் குறிப்பிட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.

தைவானுக்கு அமெரிக்காவின் உயரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் வந்து சென்றால், அந்த நாடு தன்னாட்சி அதிகாரம் கொண்ட நாடாகாத்தான் கருதப்படும் என்ற கருத்தின் அடிப்படையில், சீனா எச்சரித்து வருகிறது. மேலும், தைவானை, தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், ''துரோகி மாகாணம்'' தைவான் என்றும் சீனா வர்ணித்து வருகிறது.

தைவானுக்கு நான்சி பெலோசி வந்து சென்றால், அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில், வாஷிங்டனில் இருந்து தனது தூதரை சீனா திரும்பப் பெறலாம். மேலும், இருநாடுகளும் தங்களுக்குள் பொருளாதார தடைகளை விதித்துக் கொள்ளலாம். அப்படி ஏற்பட்டால், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சீனாவுக்கு மேலும் சிக்கலை உருவாக்கும்.

தைவானுக்கு நான்சி பெலோசி வரும்போது, அந்த நாட்டின் வான் எல்லையில் சீனா தனது போர் விமானங்களை பறக்கவிட்டு தடைகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும், தைவான் தீபகற்பத்தை சுற்றிலும் சீன ராணுவம் பயிற்சியில் ஈடுபடலாம் என்று தெரிகிறது. 

இந்த நிலையில், சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவில் இருப்பவர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று சீனா எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios