கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சீனாவில் இதுவரை 1,110 பேர் உயிரிழந்துள்ளனர்  சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் நாள்தோறும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றன.  

இந்த கொரோனா காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை , இதனால் காய்ச்சலை குணப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது அதேநேரத்தில் காய்ச்சலை தடுக்கும் சிகிச்சை முறைகளும் பலனளிக்கவில்லை ,  சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா , ஜப்பான் ,  சிங்கப்பூர் ,  என வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதனால் மக்கள் வெகுவாக பீதியடைந்துள்ளனர் .  சீனாவில் வுகான் நகரில் டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய இந்த வைரசுக்கு  கடந்த 7ஆம் தேதி 723 பேர் பலியாகி இருந்தனர் ,  அதற்கடுத்த நாள் சுமார் 81பேர் உயிரிழந்தனர் ,

 

கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த எண்ணிக்கையைவிட கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது .  வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவியதில்  908 பேர் உயிரிழந்த நிலையில் நாள் ஒன்றுக்கு குறைந்த து 80 முதல் 100 பேர் என உயிரிழப்பு ஏற்படுகிறது.   இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை   1,110 ஆக உயர்ந்துள்ளது .  இதுவரை  சுமார் 44 ஆயிரத்த 200 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.